SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாமரை தரப்பில் நிலவும் கருத்து வேறுபாடு குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-22@ 01:10:24

‘‘புதுச்சேரி இடைத்தேர்தல் எப்டி இருக்கும். இலை கட்சி போட்டியிடுமா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘காமராஜர் நகர் தொகுதியை கைப்பற்றி ‘கெத்து’ காட்ட வேண்டும் என்று தாமரை தீவிரம் காட்டுகிறதாம். இதற்காக தாமரை தரப்பு ஸ்டார் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளதாம். புதுச்சேரியில் இதுவரை ஆட்சி பொறுப்புக்கு  தாமரை  வந்ததில்லை. எனவே அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறதாம். இதற்காக கிருஷ்ணனின் மற்றொரு பெயரை கொண்டவருக்கு சிவப்பு கம்பளம் போட்டு இருக்காம். காமராஜர்  தொகுதியில் தாமரை கண்வைக்க காரணம், அங்கு குறிப்பிட்ட வடமாநிலத்தை சேர்ந்த சமூக மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்த ஓட்டுகள் எப்படியும்  மிஸ் ஆகாது. அதேபோல் கிருஷ்ணன் பெயர் கொண்டவர் ஏற்கனவே வெற்றிப்பெற்ற  காசுக்கடை தொகுதியின் ஒரு சில பகுதிகள் புதிதாக உருவாகியுள்ள காமராஜர் நகரில் வருகிறது. எனவே கூட்டி, கழித்து பார்த்துதான் தாமரை தீவிரம் காட்டுகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.   ‘‘என்ன விக்கி தாமரை தனித்து போட்டியிடப்போகுதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தாமரைக்கு தலைவரே இல்லாத நிலையில் தனித்து போட்டியிடுவது குறித்து மாநில அளவில் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். ஒரு சிலர் தனித்து நின்று நமது பலத்தை நிரூபிக்கலாம். அதற்கு சரியான வாய்ப்பு  கிடைத்து இருக்கிறது. நாங்குநேரியில் கணிசமாக வாக்குகளை வாங்கலாம் என்று சொல்கிறார்களாம். நிரந்தர தலைவரை நியமிக்கும் வரை இடைத்தேர்தலில் கவனம் செலுத்துவதைவிட உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தலாம்.  இடைத்தேர்தலில் நம்மால் பணத்தை செலவிட முடியாது. இதனால் டெபாசிட் போய் தேசிய தலைமைக்கு அசிங்கத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம்... இரண்டு தரப்பும் தாமரையின் செயல் தலைவர் மூலம்  காய்களை நகர்த்தி வர்றாங்களாம். அவரே நமக்கு வட இந்தியாவில் இரண்டு மாநில பொதுத் தேர்தல்கள்தான் முக்கியம்... உங்கள் பிரச்னையை தமிழக பொறுப்பாளரிடம் சொல்லி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பதில் வருகிறதாம்... அதனால  இடைத்தேர்தல் போட்டியில அநேகமாக தாமரை இருக்காது என்று அக்கட்சியின் தொண்டர்கள் பேசிக் கொள்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘அப்போது பொதுக்குழு, செயற்குழு அவ்வளவுதானா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடப்பதால் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட கால அவகாசம் வேண்டும் என்று ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினால் போதும் என்ற நினைப்பில் இலை தரப்பு இருக்கிறதாம். மேலும்  இந்த இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் சேலம்காரர், தேனிகாரர் இறங்கி இருக்காங்களாம். இதற்காக சீனியர் மந்திரிகளும், பசை உள்ள மந்திரிகளையும் களத்தில் இறக்கிவிடப்போறாங்களாம். குறிப்பாக  இலை கட்சி கடந்த இடைத்தேர்தலில் நியமித்த பொறுப்பாளர்களையே இந்த இரண்டு தொகுதிகளுக்கும் போடலாமா என்று யோசித்து வருகிறதாம். ஆனால் கட்சிக்குள் உள்ள மற்ற கோஷ்டிகள் எங்கள் தொகுதிக்குள் இவர்கள் வரக்கூடாது...  நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்களாம். ஆனால் சேலம்காரரோ, இது விளையாட்டு அல்ல. வாழ்வா, சாவா பிரச்னை. உங்கள் அதிருப்திகளை மூட்டை கட்டி வைச்சுட்டு ஜெயிக்கிற வேலையை பாருங்க... வேற எதுவும் என்  காதுக்கு வரக்கூடாது...அதுவரை நான் சொல்றதை மட்டும் செய்யுங்க என்று அதிரடித்துள்ளார். அதை பார்த்த அதிருப்தி கோஷ்டி பெட்டி பாம்பாக அடங்கி போயிட்டாங்களாம்... இதெல்லாம் அறிவிப்பு வர இருந்த சில வாரங்களுக்கு முன்பு  நடந்ததாக அடிபொடிகள் பேசிக் ெகாள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆசிரியர் நியமனத்தில் பல கோடி ஊழலாமே...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘எழும்பூர் தமிழ் சாலையில் உள்ள கலை பண்பாட்டு துறையில் ஆசிரியர் நியமனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தலைமை செயலகத்தில் உள்ள இந்த துறை செயலாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம்  உள்ளதாம். சமீபத்தில் மதுரையில் இருந்து கலை மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து தப்பாட்ட கலைஞர் ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு அரசு கலாசார துறையில் கடந்த 22 வருடமாக பணி நியமன ஊழல் நடக்கிறது. இந்த  துறையில் உதவி ஆணையர் பதவியில் உள்ள இரண்டு பேர் இதன்மூலம் பல கோடிகளை சம்பாதித்துள்ளனர். தற்போது இந்த துறையில் நாதஸ்வரம், தவில், தேவாரம் உள்ளிட்ட ஆசிரியர் பதவிக்கான எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு  நடைபெற்றுள்ளது. எழுத்து தேர்வில் மிக எளிதான கேள்வி கேட்கப்பட்டு, தேர்வானவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ₹10 லட்சத்துக்கும் மேல் முன் பணம் வாங்கி விட்டனர். அவர்களுக்குதான் பணி நியமனமும் வழங்க சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் காய்நகர்த்தி வருகிறார்கள். அதனால் கலாசாரத்துறையை சீரழித்து வரும் இந்த இரண்டு அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளாராம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘பெரணமல்லூரில் குடிமராமத்து பணி நடக்குதா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தி ஏரி, குளங்களின் கரைகளை பலப்படுத்தி குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளவும், புதிய குளங்களை வெட்டவும் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்தார்.  இதில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றிய அளவில் சுமார் 25 ஏரிகள், 58 குளங்கள் குடிமராமத்து பணிகள் தொடங்க ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பெரணமல்லூர் பேரூராட்சியில் ஒன்பது  குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் குடிமராமத்து பணி செய்வதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதால் நகர நிர்வாகிகள் துவண்டு போய் உள்ளனர். அரசு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வலியுறுத்தி வரும் வேளையில்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. ஆனால் பெரணமல்லூர் பேரூராட்சியில் இதுவரை ஒரு குளம் கூட மராமத்துப் பணிகள் செய்யாமல் நீர்வரத்து கால்வாய்கள் அடைபட்டு  மழைநீர் வீணாக செல்வதை கண்டு பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

 • monkey_thaayklannn1

  குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

 • eelephanttt11

  35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

 • muskes_ambani11

  27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

 • delhi_farmnmmmeee

  திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்