SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ் தெரியாத அதிகாரிகளிடம் விவசாயிகள் மாட்டி தவிப்பதை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2019-09-20@ 00:21:42

‘‘கரூர் மந்திரிக்கு என்னாச்சு...  விரைவில் கட்சி தாவுவாரா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கரூர் மந்திரி ஒரே குழப்பத்துல இருக்காராம். அதனால தான் அவர் ஒரு கேள்விக்கு இரண்டு பதில் சொல்லி இருக்கிறார். கரூர் மாவட்டத்தில் அமைச்சராக இருந்தும் அவரது அரசியல் செல்வாக்கால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க வைக்க முடியவில்லையாம். அதிகம் பணம் புழங்கும் துறையில் இருந்து ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை என்றால் எப்படி என்று அவருக்கு எதிராக அரசியல் நடத்தும் அதிருப்தியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு உள்ளது. அவருக்கும் இந்த தேர்தல் தோல்வி மனதளவில் பெரிய காயத்தை ஏற்படுத்தி இருக்காம். அதனால இப்போதே மாற்றுக்கட்சியில் இணைய துண்டு போட்டிருப்பதாக கேள்வி. எதிர்காலத்தில் வழக்கு போன்றவற்றில் இருந்து தப்பிக்க தான் இந்த ஐடியாவாம். மக்கள் பணியை மாற்றுக் கட்சிகள் அறிவித்த மறுகணமே அவசரம் அவசரமாக போலீசை இறக்கிவிட்டு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தூர்வாரும் பணியை இலை கட்சி தொடங்கியது. இத்தனை நாளாக கண்டுகொள்ளாமல் இருந்த குளத்திற்கு இப்படியாவது விமோசனம் கிடைத்ததே என பொதுமக்கள் திருப்திபட்டுக்கொண்டனர். இதை பார்த்த மாற்று கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் வேண்டுமானால் அவர் எங்கள் கட்சியில் இணையலாம் என்று ஓபன் டாக் விட்டார். இதனால் அதிர்ந்துபோன கரூர் மந்திரிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லையாம்.

உடனே இளைஞர் அணியில் சேர எனக்கு வயதில்லை என கரூர் மந்திரி பதில் கூறினார். இதை கேட்ட இலை கட்சி  தொண்டர்கள், எங்கள் கட்சிக்கு நீங்க வாங்க நாங்க பதவி தருகிறோம் என்று சொல்லாமல்... எதுக்கு வயதில்லை என்று சொல்கிறார். அப்படி அவருக்கு வயது இருந்தால் மாற்று கட்சியில் இப்போது இணைந்து இருப்பாரா என்று கரூர் இலை கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் வெளிப்படையாகவே பேசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தமிழ் தெரியாத அதிகாரிகளால் வேளாண் துறையின் வளர்ச்சியே கேள்விக்குறியாக இருக்காமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பொறுப்பில் வடமாநிலத்தை சேர்ந்த தீட்சண்யமானவரும், இதே துறையில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக சிங்கானவரும் உள்ளனர். உயர்மட்ட பொறுப்பில் உள்ள இந்த 2 பேர் விவசாயிகளை கிறுகிறுக்க வைக்கிறார்களாம். திட்டங்கள் தொடர்பான சந்தேகங்களை விவசாயிகள் கேட்கும்போது, அவர்களுக்கு தமிழ் புரியாமல் திருதிருவென விழிக்கிறார்களாம். அல்லது இந்தி, ஆங்கிலத்தில் பேசுகிறார்களாம். அப்படியே தமிழில் பேசினாலும், விவசாயிகள் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து போகிறார்களாம். இவ்வாறு இவர்களிடம் புரிந்தும் புரியாமலும் சிறிது நேரம் போராடி பார்க்கும் விவசாயிகள் தலையில் அடித்துக் கொண்டு திரும்பி விடுகிறார்களாம். அதோடு விவசாய நலத்திட்டங்களும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லையாம். மாவட்டத்தில் விவசாயமே முடங்கி கிடக்கிறதாம். இதுதொடர்பாக விவசாயிகளுக்கு புரிய வைக்கவும் இவர்கள் தங்களுக்கு கீழே உள்ள அதிகாரிகள் மூலம் முயற்சி எடுப்பதில்லையாம். எனவே, தமிழை தாய்மொழியாக கொண்டவர்களை  இதுபோன்ற துறைகளின் தலைமை பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ சாமியார் மேட்டர்ல கலெக்டர் ஆடிப்போயிருக்காராமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சாமியார் ஜீவசமாதி அடையப்போறதா சொன்னது எல்லாம் நாடகம்னு ஊரே தெரிஞ்சு போச்சு... அது மட்டுமல்ல... ஜீவசமாதி ஆகப்போறேன்னு சொன்னதால மக்களிடம் காணிக்கை என்ற பெயரில் பெரிய வசூல் வேட்டையே நடந்திருக்கிறதாம்... லட்சக்கணக்குல வசூலானதா சொல்றாங்க... அதுல சில ஆயிரங்கள்தான் போலீஸ்கிட்ட சிக்கியிருக்கு... அது மட்டுமில்லை.... சிவகங்கை கலெக்டர், சாமியார் அருகிலேயே ஜீவசமாதி அடைவதை பார்ப்பதற்காக இரவு முழுவதும் அமர்ந்திருந்தாராம்... இதுபோன்ற விஷயங்களை கலெக்டரே ஊக்குவிக்கும் வகையில் நடக்கலாமா என அவரைப்பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்து இருக்காம். கைது நடவடிக்கை கூட கண்துடைப்புதான்னு பேசிக்கிறாங்கப்பா... இந்த விவகாரத்துல கலெக்டருக்கு மட்டும் கடும் நெருக்கடி ஏற்படலையாம்... சாமியாரை பிரபலப்படுத்தும் வகையில் காரைக்குடி, சிவகங்கையில் பணியாற்றும் சில உளவுப்பிரிவு போலீசாரும் முக்கிய பிரமுகர்களை சாமியாரிடம் அழைத்து சென்றனராம்... பணவசூல் குறித்து இந்த போலீசார் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறதாம்... இவ்வளவு களேபரமாகியும் சாமியார்கிட்டே ஒப்புக்கு போலீஸ் விசாரணை நடத்தியதோடு சரியாம்... அவர் எதைப்பத்தியும் கவலைப்படாம ‘கூலாக’ இருக்கிறாராம்... இதனால் அவரை சுற்றியுள்ள நபர்கள்தான் கடுமையான நெருக்கடியில் இருக்கிறார்களாம்... சாமியாருக்கு சில ஆளுங்கட்சி பிரமுகர்கள் தரப்புலயும் ஆதரவு உண்டுன்னு பேசிக்கிறாங்கப்பா...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கால்நடை மருத்துவர்களை பற்றி புகார் வருதாமே...’’‘‘கோவை செட்டிபாளையத்தில் தமிழக அரசின் கால்நடை மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை, வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. இங்குள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், மருத்துவமனையை பூட்டிவிட்டு, சொந்த வேலையை பார்க்க சென்றுவிடுகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் 2 மணி நேரம்கூட மருத்துவமனையை திறப்பதில்லை. சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்களது கால்நடைகளுக்கு உடல்நலக்கோளாறு ஏற்படும்போது, பல கி.மீ தூரத்தில் இருந்து கால்நடைகளை கொண்டு வருகின்றனர். ஆனால், இங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து, திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
 சில நேரங்களில், மருந்து, மாத்திரை எல்லாவற்றையும் வெளியே வாங்கி வரச்சொல்லி சிகிச்சை அளிக்கிறார்கள். அத்துடன், 200, 300 என பணமும் பிடுங்கிக்கொள்கின்றனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வெளியூர்களுக்கு ரவுண்ட்ஸ் சென்று, பெரும் முதலாளிகளின் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து, கைநிறைய காசு பார்க்கின்றனர். ஏழை விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க துவக்கப்பட்ட இந்த கால்நடை மருத்துவமனை, பல நேரங்களில் மூடியே கிடக்கிறது. இங்குள்ள மருத்துவர்கள் வெளியே வசூல் எடுக்க துவங்கிவிட்டதால், ஏழை விவசாயிகளையும், அவர்களது கால்நடைகளையும் கண்டுகொள்ள யாருமில்லை. இந்நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

 • monkey_thaayklannn1

  குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

 • eelephanttt11

  35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

 • muskes_ambani11

  27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

 • delhi_farmnmmmeee

  திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்