தேர்வு கட்டணத்தை கண்டித்து விருத்தாசலம், திண்டிவனத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
2019-09-19@ 17:23:36

கடலூர்: தேர்வு கட்டண உயர்வை கண்டித்து திண்டிவனம் மற்றும் விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இக்கல்லூரியில் இளங்கலை வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 68 ரூபாய் தேர்வு கட்டணமாக இருந்ததை 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் முதுகலை வகுப்புகளுக்கு ஒரு பாடத்திற்கு தேர்வு கட்டணம் 160 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு கட்டண உயர்வை திரும்பப்பெற கூறி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பறைகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து விருத்தாசலம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காணுவதாக உறுதியளித்த நிலையில், அதனை ஏற்ற மாணவர்கள் தேர்வுக்கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் மீண்டும் பலகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இதுபோல் தேர்வு கட்டண உயர்வினை கண்டித்து திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக வகுப்புக்களை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கல்வி கட்டணத்தை உயர்த்திய கல்லூரி நிர்வாகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர் ஒருவர் கூறுவதாவது, கட்டண உயர்வை கண்டித்து மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தியும் கல்லூரி நிர்வாகமும், பல்கலைக்கழக நிர்வாகமும் எந்தவொரு தீர்வையும் அளிக்கவில்லை எனவும், தங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை தாம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை தைத் தேரோட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலமாக வந்த மணமக்கள்
அவன் இவன் பட வழக்கு: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்
அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா: திருப்பூர் மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர் நகரில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் தவிப்பு-வழிப்பறி சம்பவங்களால் அச்சம், பீதி
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!