SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துப்பாக்கியுடன் வங்கியில் நுழைந்து மிரட்டல்: காஷ்மீரில் கடைகளுக்கு சீல் வைக்கும் தீவிரவாதிகள்

2019-09-19@ 00:05:02

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் கடைகளுக்கு சீல் வைத்துள்ள தீவிரவாதிகள், மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 5ம் தேதி சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், இம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதனை தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டதால் அங்கு முன்னெச்சரிக்ைக நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. படிப்படியாக அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், கடைகளுக்கு தீவிரவாதிகள் சீல் வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி உள்ளனர். மேலும், மக்களை மிரட்டும் வகையில் பல இடங்களில் போஸ்டர்களும் ஒட்டியுள்ளனர். இந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

ஆயுதம் ஏந்திய  தீவிரவாதிகள் கடைகளுக்கு சென்று கடையை மூடும்படி உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், தெற்கு காஷ்மீரில் வங்கி கிளைகளுக்கு சென்ற தீவிரவாதிகள், அங்கிருந்த ஊழியர்களை பணி செய்யவிடாமல் மிரட்டி வெளியேற்றி உள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நிலமை போலீசாரின் கைகளை மீறி சென்று விட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குல்காம் மாவட்டத்தில் மோத்ரிகம் கிராமத்தில் சமீபத்தில் இரண்டு கடைகளுக்கு தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு மூலமாக சீல் வைக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீநகரில்  கரண் நகர் மார்க்கெட் பகுதியில் இரண்டு கடைகளில் கடைசி எச்சரிக்கை என்பதை குறிக்கும் வகையில் ஆங்கிலத்தில் லாஸ்ட் வார்னிங் என பொருள்படும் எல்டபள்யூ என்ற எழுத்துக்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், “ நாங்கள் கடைகளை திறப்பதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால், வீட்டிற்கு திரும்பி செல்லும்போது எங்களுக்கு யார் பாதுகாப்பு தருவது? இது குறித்து காவல் துறை மூத்த அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். ஆனால், இன்னும் தீர்வு காணப்படவில்லை,” என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்