பெரணமல்லூரில் உள்ள குளத்திற்கு கம்பிவேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
2019-09-18@ 20:38:41

பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே சூரியகுளம் உள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இக்குளத்தின் அருகே சுகாதார மையம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெரணமல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக இக்குளம் நிரம்பி வழிகிறது. இதனால், சுகாதார மையத்துக்கு வந்து செல்லும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கி இருக்கும் நோயாளிகளின் குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் இக்குளத்தின் அருகே விளையாடுகின்றனர். எனவே சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இக்குளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வீட்டில் கிளப் வைத்து சூதாடிய பஞ். தலைவர் உட்பட 15 பேர் கைது: ரூ.7 லட்சம் பறிமுதல்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கல்லூரி மாணவி கொலை: உறவினர்கள் மறியல்
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்-மாநகராட்சி முடிவு
3,500 அடி உயரத்தில் இருந்து தேனி மாவட்டத்தை ரசிக்கலாம் கொளுத்தும் வெயிலுக்கு வெட்டுகவர்ந்திழுக்குது ராமக்கல் மெட்டு
மின் மோட்டார் கேபிள் திருட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் மலர் கண்காட்சி நாளை துவக்கம்
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!