சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு மோடி - சீன அதிபர் வருகை: மாவட்ட கலெக்டர் ஆய்வு
2019-09-18@ 00:18:00

சென்னை: உலக அளவில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற மாமல்லபுரத்திற்கு வருகிற அக்டோபர் 11ம் தேதி வாக்கில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் 3 நாள் பயணமாக வருகை தர உள்ளதாகவும் அவர்கள் மாமல்லபுரத்திலுள்ள அழகிய சிறப்பு வாய்ந்த புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம் ஆகியவைகளை பார்வையிட்டு சீனா- இந்தியா இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட உள்ளதாகவும், இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சாலைகளை சீரமைப்பது, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஆகியவைகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அர்ச்சுணன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். மாவட்ட கலெக்டரின் இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, திட்ட அலுவலர் தர், செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், மாமல்லபுரம் ஏஎஸ்பி பத்ரிநாராயணன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ், துணை தாசில்தார் ரபீக், சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் லதா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
பூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது..! கழகத்திற்கு கிடைத்திருக்கும் பெருமை: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்தாண்டு பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்...! மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள்: அமைச்சர் செங்கோட்டையன்
ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? : தமிழக அரசு மீது கமல்ஹாசன் தாக்கு!!
72-வது குடியரசு தினம்..! சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: சிறப்பு விருதுகளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி
கோவை மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணம் சிபிசிஐடி விசாரணை நடத்த முதல்வருக்கு திமுக வலியுறுத்தல்
அகில இந்திய குடிமைப்பணி நுழைவுத்தேர்வு முடிவுகள் 27ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்