தென் கொரியாவில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுகிறது : 4 ஆயிரம் பன்றிக்குட்டிகளை உயிருடன் புதைக்க அரசு முடிவு
2019-09-17@ 17:25:28

சியோல் : வீட்டு விலங்குகளை அபாயகரமாக தாக்கக் கூடிய தொற்றுநோய்களில் ஒன்றான ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் தென் கொரியாவில் பரவி இருக்கிறது உறுதி ஆகியுள்ளது. ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வருவதால் தென் கொரியாவில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது வட கொரியா நாட்டில் இருந்து கியோங்கி மாகாணம் பஜு நகர் வழியாக தென் கொரியாவிற்கு பரவி இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனை தென் கொரியாவின் வேளாண்மை, உணவு மற்றும் கிராமப்புற விவகார அமைச்சர் கிம் ஹியோன்-சூ உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் உச்சக்கட்ட எச்சரிக்கையின் ஒரு பகுதியாக 4000 பன்றிக் குட்டிகளை உயிருடன் புதைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளை அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் தாக்கக் கூடிய வைரஸ் தொற்று நோய் ஆகும்.தென் கொரியாவில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.முன்னதாக சீனாவில் ஆப்ரிக்க பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முக்கால்வாசி பன்றிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகின.ச பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 கோடிக்கும் அதிகமான பன்றிகள் பலியானதையடுத்து, அவசர காலத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட பன்றி இறைச்சியை சீன அரசு விடுவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா!!
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
அவசர கதியில் 6 மருத்துவமனை கட்டுகிறது மீண்டும் பரபரப்பாகிறது சீனா: தடுப்பூசிக்கும் அடங்காத கொரோனா வைரஸ்
அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு
பலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு
பாகிஸ்தான் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை: பிரதமர் மோடி படத்துடன் பேரணி நடத்திய சிந்து மாகாண மக்கள்.!!!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்