SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடப்பாண்டில் தற்போதுவரை 250 பேர் மலேரியாவால் பாதிப்பு

2019-09-17@ 00:48:36

* செப்டம்பரில் மட்டும் 93 பேர் கண்டுபிடிப்பு
* தெற்கு மாநகராட்சி அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: நடப்பாண்டு தலைநகரில் மலேரியா நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 250 ஆக  உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில்  மட்டும் குறைந்தபட்சம் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாநகராட்சி அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய் தாக்குதலில் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டது. இதனால் இதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் நடப்பாண்டில் டெங்குவின் நோய் தாக்கம் குறைந்துள்ளது. இருப்பினும், மலேரியாவின் நோயினால் இந்த ஆண்டில் எந்த மாதத்திலும் இல்லாத அளவாக மலேரியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நடப்பண்டில் இதுவரை 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தெற்கு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதவாது:

கடந்த பல வாரங்களாக டெல்லியில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை, டெங்கு நோயாளிகளை விட அதிகமாக பதிவாகி உள்ளது. நடப்பாண்டில் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை டெங்கு  நோயாளிகளின் எண்ணிக்கை 171 ஆக பதிவாகியுள்ளது. மலேரியாவின் தாக்கம் என்பது, ஆகஸ்டு மாதத்தில்  56 ஆகவும்,  ஜூலையில் 54,  ஜூன் மாதத்தில் 35, மே மாதத்தில் 8 மற்றும் ஏப்ரலில் ஒன்று என பதிவாகியுள்ளது. அதேபோன்று டெங்குவை பொறுத்தவரை, செப்டம்பரில் 79,  ஆகஸ்டில்  52, ஜூலை மாதம் 18, ஜூன் மாதத்தில் 11 மற்றும் ஜனவரி மற்றும் மே  மாதங்களுக்கு இடையில் மீதமுள்ள எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சிக்குன்குனியாவை பொறுத்தவரை, இந்த ஆண்டு குறைந்தது 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு, 2,798 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். டெங்கு நோய் பரவலை ஏற்படுத்தும் கொசு உற்பத்தியை தடுக்க, டெல்லி  அரசும் உள்ளாட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, டெங்கு நோய் பரவலுக்கு எதிராக கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு ‘10 ஹாப்டே, 10 பேஜே, 10 மினிட்’  என்கிற பெயரில் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரத்தின் படி, செப்டம்பர் 1 மற்றும் நவம்பர் 15 வரை டெங்குவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்  பிரச்சாரத்திற்கு பல்வேறு பிரபலங்கள்,  கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், பாலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபல பத்திரிகையாளர்கள் உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்