தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகம் விரிவுபடுத்தப்படுமா?...சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
2019-09-14@ 15:17:08

தரங்கம்பாடி: தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தை விரிவுபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டேனீஷ் நேவிகேப்டன் ரோலண்டுகிராப் தரங்கம்பாடியையும் அதன் சுற்றுபுறத்தையும் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் மன்னரிடம் விலைக்கு வாங்கி கி.பி.1620-ல் தரங்கம்பாடி கடற்கரையில் டேனீஷ் கோட்டையையும் அதை சுற்றி மதில் சுவர்களையும் எழுப்பி நுழைவாயிலையும் கட்டினார். அந்த டேனிஷ் கோட்டை தடிமமான சுவர்களால் மிகவும் வலுவாக கட்டப்பட்டது. டேனிஷ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் டேனிஷ் கிழக்கிந்திய வர்த்தக கம்பெனியின் நிர்வாக மையமாக விளங்கி வந்தது. கோட்டையின் மேல் தளத்தில் டேனிஷ் ஆளுநர் டேனிஷ் தளபதி வர்த்தக நிறுவனத்தின் அதிகாரிகள், அலுவலர்கள் தங்கி பணிகளை செய்து வந்தனர். கோட்டையின் கீழ்தளத்தில் பண்டக வைப்பறை, கிடங்கு, பீர் மற்றும் ஒயின்அறை, சமையல் பொருளுக்கான அறை, சமையலறை, கோழி வளர்க்கும் அறை, வீரர்கள் தங்கும் அறைகள், உள்ளிட்ட 11 அறைகளும் சிறைச்சாலையும் உள்ளன. ஆங்கிலேயர் வசம் இருந்த டேனீஷ் கோட்டை இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மத்திய அரசின் கட்டுபாட்டிற்கு வந்தது. அதன் பின் 1978ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுதுறையின் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டது. இங்கு அருங்காட்சியகம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில் டேனிஷ் காலத்து நாணயங்கள், டேனிஷ் மக்கள் பயன்படுத்திய பொருட்கள், டேனிஷ் வீரர்கள் பயன்படுத்திய போர் கருவிகள் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் டேனீஷ் கோட்டையையும் பார்த்து தரங்கம்பாடி சிறப்பை அறிந்து செல்கின்றனர். இந்நிலையில் டேனீஷ் கோட்டையை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் பார்க்கக்கூடிய அளவிற்கு அரிய பொருட்கள் அதிக அளவில் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர். இது குறித்து மதுரையில் இருந்து சுற்றுலா வந்திருந்த ஆறுமுகம் கூறியதாவது, நாகை மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி சுற்றுலா பகுதிகளை பார்வையிட்டு விட்டு தரங்கம்பாடிக்கு வந்தோம். தரங்கம்பாடி கடற்கரை நீண்ட கடற்கரையாகவும் அழகாகவும் உள்ளது. டேனிஷ் கோட்டையை பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் மிகுந்த ஆர்வத்துடன் டேனிஷ் கோட்டையை பார்வையிட்டோம். அங்குள்ள அருங்காட்சியத்தில் அரியவகை பொருட்கள் அதிகம் இல்லை. இது எங்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தி அரிய வகை பொருட்களை அதிகம் வைத்திருந்தால் சுற்றுலா பயணிகள் மனம் கவரும் வண்ணம் இருக்கும். தொல்லியியல் துறை அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
சசிகலாவை வரவேற்று தூத்துக்குடியிலும் ஆதரவு போஸ்டர்கள்!: ஓ.பி.எஸ். இ.பி.எஸ்.க்கு தொடரும் நெருக்கடி..!!
தமிழகத்தில் வரும் 31-ம் தேதி முதல் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்
தேசிய வாக்காளர் தின போட்டியில் அரசினர் சிற்ப கல்லூரி மாணவர் முதலிடம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!