கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ்?
2019-09-14@ 11:53:17

மும்பை: கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு வருமான வரித்துறையினர் கடந்த மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புகாரில் விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு எச்எஸ்பிசி ஜெனிவாவில் கணக்கு வைத்திருந்த 700 இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக கிடைத்த விவரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து விசாரணை அமைப்புகள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் புலனாய்வுக்கு பிறகு வருமான வரித்துறையின் மும்பை பிரிவு தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் முகேஷ் அம்பானியின் மனைவி நித்தா அம்பானி மற்றும் அவருடைய 3 பிள்ளைகளுக்கு கடந்த மார்ச் 28-தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புகாரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்களை கண்டறிந்து வரி வசூலிக்கும் கருப்பு பண தடுப்பு சட்டம் 10-வது பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளை அடிப்படையாக கொண்ட கேப்பிடல் இன்வெர்ஸ்மென்ட் டிரஸ்ட் மற்றும் அதன் கீழ் வரும் நிறுவனங்களை கேமேன் தீவுகளை அடிப்படையாக கொண்ட இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்தின் இறுதி பயனாளர்களாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இருந்ததாகவும் இதுகுறித்த விவரங்களை அவர்கள் கணக்கில் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை நோட்டீஸ் புகாரில் குறிப்பிட்டிருந்ததாவும் தெரிவிக்கின்றன.
மேலும் வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விவரங்களை தெரிவிக்குமாறு நோட்டீஸில் குறிப்பிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான முதல் விசாரணை தேதியாக கடந்த ஏப்ரல் -12 தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை அடியோடு மறுக்கிறார்.
மேலும் செய்திகள்
திருக்குறளை படித்து வருகிறேன், அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன் : ராகுல் காந்தி ட்வீட் !!
உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!