SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

2019-09-14@ 00:17:08

* இலங்கை பிரதமரிடம் கனிமொழி எம்பி வலியுறுத்தல்

சென்னை: 'தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்தார். திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான குழுவினர், இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேற்று சந்தித்து பேசினர். அப்போது கனிமொழி எம்பி, ' தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. எனவே, அவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகள் விடுவிக்கப்படாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, இது தொடர்பான சட்டத்தைத் தளர்த்தி, படகுகளையும் விடுவிக்க்க வேண்டும். அதே நேரம், இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். முன்னதாக கனிமொழி எம்பி, இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதாராச்சியை சந்தித்து பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimalai-3

    பக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்!: புகைப்படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்