பெருங்குடி மண்டல அலுவலகத்தில் கொசு ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
2019-09-12@ 00:39:02

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலத்தில் அமைந்துள்ள பள்ளி, கட்டுமான நிறுவன பகுதிகளில் தேங்கியுள்ள கொசுக்களை ஒழிப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆதம்பாக்கம் அடுத்த புழுதிவாக்கத்தில் சென்னை மாநகராட்சி பெருங்குடி 14வது மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுலவகத்தில் நேற்று முன்தினம் மண்டல சுகாதார அலுவலர் ராஜா தலைமையில் பள்ளி, தனியார் கட்டுமான நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், புழுதிவாக்கம் பகுதியில் பள்ளி, தனியார் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மண்டல சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இங்கு தேங்கியுள்ள மழைநீரில் இருக்கும் தளவாட மற்றும் கட்டிட கழிவுகளில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது. இவை டெங்கு உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சலுக்கு வழிவகுக்கும். இவற்றை அகற்றாதவர்கள் மீது அதிகபட்ச அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்படுவது ஏன்? காங். எம்.பி. கேள்வி
தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று முக மலர்ச்சியோடு கொரோனா தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும் : ஆளுநர் தமிழிசை
9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் நாளை மறுதினம் திறப்பு: ஆயத்த பணிகள் தீவிரம்
முதல்வர் பழனிசாமி, தனது தோல்விகளை மறைத்து அரசுப் பணத்தில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்துக் கொண்டிருக்கிறார் : மு.க.ஸ்டாலின் உரை
அமெரிக்க அதிபர் போல பிரதமர் மோடியும் முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கலாம் : கே.எஸ்.அழகிரி
சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட உதவிட வேண்டும் : முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்