காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர் தீவிரவாதி சுட்டுக் கொலை
2019-09-12@ 00:18:38

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பழ வியாபாரி வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோப்பூரில் சமீபத்தில் பழ வியாபாரி வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வீட்டுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள், பழ வியாபாரி இல்லாததால் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலில் வியாபாரி ஹமிதுல்லா ராதெரின் பேத்தியான பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பதுங்கி இருப்பதாக நேற்று வந்த தகவலை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.
போலீசாரை பார்த்த தீவிரவாதி அங்கிருந்து தப்பி செல்வதற்கு முயன்றான். மேலும் போலீசார் மீது கையெறி குண்டை வீசினான். இதில், இரண்டு போலீசார் காயமடைந்தனர். போலீசார் எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாத தீவிரவாதி அங்கிருந்து தப்ப முயன்றான். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதி லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த ஆசிப் மக்பூல் பாட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இவன் பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளான். போஸ்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தது, கடைகளை திறக்க வேண்டாம் என மிரட்டியது, அன்றாட பணிகளில் ஈடுபடக் கூடாது என மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளான். சோப்பூரில் பழ வியாபாரி வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்திலும் ஆசிப்புக்கு தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் பாதுகாவலருக்கு ஒவ்வாமை : 52 பேருக்கு பக்கவிளைவால் தீவிர கண்காணிப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்