SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால்நடை, மீன்களின் உயிரை பறிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் : தடுப்பு மருந்து திட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

2019-09-12@ 00:18:34

மதுரா: கால்நடை, மீன்களின் உயிரை பறிக்கும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறு பொதுமக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் மோடி ேநற்று ஒரு நாள் பயணமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்றார். மதுராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த,  கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய் நோய்களை ஒழித்துக்கட்டும் தேசிய விலங்குகள் நோய் கட்டுப்பாடு திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக, குப்பையில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் அமர்ந்து, அவர்களுக்கு உதவினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், கால்நடைகள் மற்றும் மீன்களின் உயிரை பறிக்கும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். எருமைகள், செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள், பன்றிகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய் நோயை கட்டுப்படுத்தும் வகையில் 50 கோடி கால்நடைகளுக்கு ேநாய் தடுப்பு மருந்து அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இதற்காக, மத்திய அரசு வரும் 2024ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு ரூ.12,652 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தவிர கன்றுகளுக்கு ஏற்படும் பாக்டீரியா நோயை தடுக்கும் வகையில் தடுப்பு ஊசி போடுவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு மோடி பேசினார்.

உலகத்தை அச்சுறுத்தும் பாகிஸ்தான் தீவிரவாதம்

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘இன்று தீவிரவாதம் என்பது நாட்டின் எல்லைகளுக்குள் வரையறுக்க முடியாத சித்தாந்தமாக மாறி விட்டது. இது உலகளாவிய பிரச்னையாக மாறி விட்டது. நமது அண்டை நாட்டில் மிக ஆழமாக வேரூன்றி செழித்து வளர்ந்து கொண்டிருக்கும் தீவிரவாதம், உலகளாவிய அச்சுறுத்தலாகி விட்டது.

இன்றைய இதே தினத்தில் நூறாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். துரதிஷ்டவசமாக, அதே செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதல் உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. கடந்த காலங்களில் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்த வலுவான நடவடிக்கைகள், எதிர்காலத்திலும் தொடரும். தீவிரவாத பயிற்சிக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் எதிராக நிற்போம் என ஒட்டுமொத்த உலகமும் உறுதிமொழி எடுக்க வேண்டியது அவசியம்,’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்