SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டி.கே.சிவகுமார் கைதை கண்டித்து ஒக்கலிக சங்கம் பிரமாண்ட பேரணி : ஆளுநரை சந்தித்து மனு

2019-09-12@ 00:17:51

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்து  சேர்த்துள்ளதாக வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில்  கடந்தாண்டு ஆகஸ்ட் 7ம் தேதி கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் டெல்லி வீட்டில் சோதனை நடத்தியபோது, கணக்கில்  காட்டாமல் பதுக்கி வைத்திருந்த ரூ.8.59 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  இப்புகார் தொடர்பாக அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில்  டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராம்நகரம் மாவட்டத்தில்  கடந்த 10 நாட்களாக காங்கிரஸ் மற்றும் சிவகுமாரின் ஆதரவாளர்கள் முழு  அடைப்பு, தர்ணா, சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். இந்நிலையில்  நேற்று பெங்களூரு  பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் இருந்து சுதந்திர பூங்கா  வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி ஒக்கலிக சங்கத்தினர் சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. பல்வேறு நகரங்களில் இருந்து லாரி, டிராக்டர்களில் மக்கள்  குவிந்தனர். பேரணியின் முடிவில், முன்னாள் எம்பி சிவராமே கவுடா தலைமையில் ஆளுநர் வி.ஆர்.வாலாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

சிவகுமார் நன்றி

டிவிட்டரில் சிவகுமார் வெளியிட்டுள்ள டிவீட்டில், ‘எனக்கு ஆதரவாக காங்கிரஸ், மஜத, ஒக்கலிக்க வகுப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் பெங்களூருவில் பேரணி நடத்தியது எனக்கு பலம் கொடுத்துள்ளது. நான் மீண்டும் சொல்கிறேன். சமூகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. எதிர்காலத்திலும் செய்ய மாட்டேன். நான் தூய்மையானவன் என்ற நம்பிக்கையில் எனக்காக பேரணி நடத்தியவர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவிக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்