பாகிஸ்தானில் பயங்கரம் : கல்லூரி பஸ்சில் குண்டு வைத்து தாக்குதல
2013-06-16@ 00:34:22

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரி பஸ்சை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். பின்னர் மருத்துவமனையில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த சம்பவங்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பாகிஸ்தானின் குவெட்டா நகரில் சர்தார் பகதூர் கான் பெண்கள் பல்கலைக்கழகம் உள்ளது. நேற்று மாலையில் ஏராளமான மாணவிகளும், ஆசிரியர்களும் வீட்டுக்கு செல்ல கல்லூரி வளாகத்தில் இருந்த பஸ்ஸில் காத்திருந்தனர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவத்தில் ஏராளமான பெண்களுக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டது. 11 மாணவிகள் இறந்தனர், 22 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள போலன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மருத்துவமனைக்குள்ளே சில தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது, பலுசிஸ்தான் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கு இருந்தனர்.தீவிரவாதிகள் சுட்டதில் குவெட்டா துணை கமிஷனர் அப்துல் மன்சூர் காகர் இறந்தார். மக்கள் அச்சத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். சில தீவிரவாதிகள் மருத்துவமனையின் மாடியில் நின்று கொண்டு மருத்துவமனைக்கு வருபவர்களை நோக்கி சுட்டனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
ஜின்னா வீடு தகர்ப்பு: பாகிஸ்தான் உருவாக காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா வசித்த கட்டிடம் நேற்று தீவிரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜியாரத் என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது அலி ஜின்னா வாழ்ந்த குவாயித்இஇசம் என்ற கட்டிடம் உள்ளது. 1892ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலின் ஏஜென்டாக இருந்தவர்கள் கோடைகால குடியிருப்பாக பயன்படுத்தி வந்தனர். ஜின்னா தனது கடைசி காலத்தில் காசநோயால் அவதிப்பட்டபோது இங்குதான் கழித்தார். பின்னர், அந்த மாளிகை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தை நேற்று சில தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்தனர். கட்டிடத்தை சுற்றி 4 குண்டுகளை வைத்து அதை அவர்கள் வெடிக்கச் செய்தனர். பின்னர் துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரர் இறந்தார்.
மேலும் செய்திகள்
ஸ்பெயின் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீ: 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்
ஜப்பானின் ஹொக்கைடோ என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு.! சுனாமி ஆபத்து இல்லை
தெற்கு இங்கிலாந்தில் துறைமுகப் பகுதியில் எண்ணெய் கசிவு: கடலில் மிதக்கும் எண்ணெய் திட்டுகளை அகற்றும் பணி தீவிரம்
லெபனானில் அரிதான மான்களை நூற்றுக்கணக்கில் வளர்க்கும் நபர்
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேற எந்த மத வாழிபாட்டு தளமும் இல்லை: இலங்கை கடற்படை விளக்கம்
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!