ஆதிதிராவிட நலத்துறை திட்ட பணிகளை தாட்கோ மூலம் மட்டும் செய்யட்டும்
2019-09-10@ 02:29:33

* பொதுப்பணித்துறைக்கு தேவையில்லை
* முதன்மை தலைமை பொறியாளர் கடிதத்தால் சர்ச்சை
சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் மாணவ, மாணவியர் விடுதிகள், பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக தாட்கோ மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு, கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இப்பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தாட்கோ மூலம் செய்வதற்கு பதிலாக பொதுப்பணித்துறையிடம் அந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து கடந்தாண்டு சென்னையில் 14 விடுதிகளில் சுற்றுச்சுவர், கழிவறை, அலமாரி அமைப்பது, சிசிடிவி கேமரா பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து ஆதிதிஇந்த நிலையில், சமீபத்தில், ஆதிதிராவிட விடுதிகளில் ஈ, கொசு பிடிக்கும் இயந்திரம் வாங்குவதற்கு 65 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஈ, கொசு பிடிக்கும் 16 இன்ச் அளவு கொண்ட இயந்திரத்தின் விலை ஒன்று ₹4,400 வரை நிர்ணயம் செய்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெளிச்சந்தையில் 16 இன்ச் அளவு கொண்ட அந்த இயந்திரம் விலை வெறும் ₹2,400 மட்டும் தான். ஆனால், கூடுதலாக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இது தொடர்பாக, பொதுப்பணித்துறைக்கு ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில், ஆதிதிராவிடநலத்துறை செயலாளர் ஓட்டெம் டாய் மற்றும் அந்த துறை இயக்குனர் முரளிதரன் ஆகியோருக்கு பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆதிதிராவிட நலத்துறைக்கான கட்டுமானம், பராமரிப்பு மற்றும் இதர பணிகளை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டாம். தாட்கோ மூலம் அந்த பணிகளை செய்து கொள்ளலாம் என்று அந்த கடிதத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு துறைகளுக்கு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை செய்து வரும் பொதுப்பணித்துறை சார்பில் ஆதிதிராவிட நலத்துறைக்கான எந்த பணிகள் வேண்டாம் என்று கடிதம் எழுதியிருப்பது அந்த துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!