அலுவலக நேரத்தில்தான் இந்தியர்கள் அதிகமாக படம் பார்க்கின்றனர்: தென் இந்தியர்கள் சொந்த மொழியை பயன்படுத்துகின்றன...ஆய்வில் தகவல்
2019-09-08@ 07:48:35

டெல்லி: இந்தியாவில் 28 சதவீதம்பேர் அலுவலக நேரத்தில்தான் செல்ஃபோனை பயன்படுத்துவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவந்துள்ளது. இன்றையக் காலகட்டத்தில் ஆன்லைனில் தகவல்களும் நிகழ்ச்சிகளும் அதிகரித்துவிட்டன. இந்நிலையில். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், பூனே, அகமதாபாத், ஜெய்பூர், லூதியானா, பானிபட், நாக்பூர் மற்றும் மதுரை என 16 நகரங்களில் 1,458 நபரிடம் ஆய்வு நடத்தப்படுள்ளது. அதில், கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் தகவல்களை செல்ஃபோன் மூலமாகவே தெரிந்துகொள்வதாகவும், அதில் 28 சதவீதம்பேர் அலுவலக நேரத்தில்தான் செல்ஃபோனை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மையான வேலைக்குச் செல்லும் இந்தியர்கள் அலுவலக நேரமான 10 - 6 வரை வேலைகளுக்கு நடுவே அதிகமாகப் படம் பார்ப்பதாக கருத்துக் கணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 70 நிமிடங்கள் ஒரு நாளைக்கு ஆன்லைன் வீடியோக்கள் பார்ப்பதாகவும் அதில் ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக 12.5 முறை பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு உலகலாவிய நிறுவனங்கள் இந்தியர்களுக்கு ஏற்ப வடிவம் தந்து முக்கியத்துவம் அளிப்பதற்கு இங்கு பெரும்பான்மையான பார்வையாளர்களைக் கொண்டிருப்பதே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியர்கள் புது புது விஷயங்களை நொடிக்கு நொடி எந்த சேனல் அளிக்கிறதோ அதையே விரும்பதாகவும், தேக்கி வைக்கப்பட்ட பழைய தகவல்கள் மட்டுமே இருக்கும் சைட்டுகளை தவிர்ப்பதாகவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதுதான் அந்த ஆப்பானாலும் யூடியூப் சேனல்களானாலும் தொடர்வதையும், துண்டிப்பதையும் தீர்மானிப்பதாகக் கூறுகிறது.
அதில் 87 சதவீதம் மக்கள் தரமான தகவல்களை உடனுக்குடன் அல்லது அடிக்கடி பரிமாறும் ஆப்புகள், சேனல்களை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் 30 சதவீதம் பேர் தான் விரும்பும் தகவல்களைத் தரும் மற்ற மொழிகளான இந்தி, ஆங்கிலம் போன்ற ஆப்புகளை இன்ஸ்டால் செய்து பார்ப்பதா தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் தென் இந்தியர்கள் தன் சொந்த மொழிக்கே முதல் முக்கியத்துவம் அளிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியா - பங்களாதேஷ் இடையே ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட மைத்ரி சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்!: டெல்லி விவசாயிகள் எச்சரிக்கை..!!
கேரள தங்க கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்!: பினராயி பெயரை தொடர்புபடுத்தும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னாவை வற்புறுத்தியது அம்பலம்..!!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க நிலம் தேர்வு!: மத்திய அரசு..!!
டெல்லியில் 7 ஆண்டுகளுக்கு பின் குறைந்தது காற்றுமாசு!: , 2020 - 21 பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்..!!
கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : லிப்டில் சிக்கி 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பலி
இன்றுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி!: 9 லட்சம் பேர் வருகை...ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்லும் மக்கள்.!!
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!