SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையில் கள்ளக்காதலி வீட்டில் வி.ஏ.ஓ சிறைபிடிப்பு : கதவை பூட்டி அம்பலப்படுத்திய மனைவி

2013-06-12@ 02:14:24

நெல்லை: நெல்லையில் கள்ளக்காதலியுடன் அவரது வீட்டில் ‘தங்கியிருந்த‘ விஏஓவை கதவை பூட்டி சிறை வைத்தார் மனைவி. போலீசார் வந்து மீட்டுச்சென்றனர்.தேனியை சேர்ந்தவர் முத்து (35). தூத்துக்குடி மாவட்டம் மருதன்வாழ்வு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவியும், ஹேமந்த் (3) மற்றும் 3 மாத ஆண் குழந்தை உள்ளனர். இவர்கள் பாளை கேடிசி நகரில் குடியிருந்து வருகின்றனர்.தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த நடராஜன் மனைவி சத்யா (25). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். கடந்த 6 மாதத்துக்கு முன் நடராஜன் திடீரென இறந்து விட்டார். இதையடுத்து, இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை போன்ற சான்றிதழ்கள் பெறுவதற்கு சத்யா விஏஓ அலுவலகத்துக்கு சென்று வந்தார். அப்போது முத்துவுக்கும், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில் முத்து, பாளை பாரதி நகரில் வீடு வாடகைக்கு அமர்த்தி சத்யாவை குடியமர்த்தினார். மனைவிக்கு தெரியாமல் முத்து, சத்யா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இந்த விபரம் மனைவி மாலாவுக்கு தெரிந்தது. இதுதொடர்பாக கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.

 இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு மாலாவுக்குத் தெரியாமல் சத்யா வீட்டுக்கு சென்று தங்கினார் முத்து. கணவர் இரவு வீட்டுக்கு வராதது, மாலாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சத்யா வீட்டுக்குத்தான் சென்றிருப்பார் என்று கருதிய அவர், நேராக அதிகாலை 5 மணிக்கு அவரை தேடி சத்யா வீட்டுக்கு சென்றார். அவருக்கு வீடு தெரியாது என்பதால் 4 வயது மகனை உடன் அழைத்துச் சென் றார். அவன் சத்யாவின் வீட்டை அடையாளம் காட்டினான்.

ஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே தனது கணவர் முத்து இருப்பதை தெரிந்து கொண்டார். தன்னை பார்த்து கணவர் தப்பியோடி விடக்கூடாது என்பதற்காக கையில் 2 பூட்டுகளுடன் வந்த மாலா, சத்யா வீட்டின் முன்பக்கமும், பின்பக்கமும் பூட்டினார். இதனால் அங்கிருந்து முத்து தப்ப முடியவில்லை. உடனே அவர் போலீசிற்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர்.தகவல் அறிந்து தாலுகா போலீசார், விஏஓ மற்றும் கள்ளக்காதலியை மீட்டு, விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

எனது கணவரை மயக்கி விட்டார்:

இதுகுறித்து மாலா கூறுகையில், ‘எனது கணவர் நல்லவர், சத்யா எனது கணவரை மயக்கி விட்டார். 3 மாதங்களாக அவர்களுக்குள் தொடர்பு இருந்தது. நான் எவ்வளவோ சொல்லியும் எனது கணவர் கேட்கவில்லை. எனக்கு தெரியாமல் அவரது வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அவருக்கு உதவி செய்வதாக கூறி, அவரது வலையில் விழுந்து விட்டார். என்னை தவிக்க விட்டுவிட்டு, சத்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். நான் இதற்கு சம்மதிக்க மாட்டேன்‘ என்றார்.சத்யா கூறுகையில், ‘எனக்கு கணவர் இல்லாததால் விஏஓ என்ற முறையில் அவர் உதவி செய்து வந்தார். எனது மகனை படிக்க வைப்பதற்காக, இங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளேன். இனி பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவேன்‘ என்றார்.

abortion pill procedures farsettiarte.it having an abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்