SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் ராட்சத எரிமலை

2019-08-28@ 14:19:46

பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் பெரிய ராட்சத எரிமலையின் அளவு, அமெரிக்காவின் மன்ஹாட்டன், வாஷிங்டன் நகரங்களுடனும் 20 ஆயிரம் கால்பந்து மைதானங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.டோங்காவின் வாவா தீவுகளிலிருந்து தென் பசிபிக் பெருங்கடல் வழியாக பிஜி சென்று கொண்டிருந்த பயணிகள் மைக்கேல் மற்றும் லாரிசா, நடுகடலில் சிறிய பளிங்கு போலவும் கூடைப்பந்து போலவும் பாறைகள் மிதப்பதை பார்த்துள்ளனர். பல மைல் தூரத்துக்கு பரவியிருந்த அவற்றில் சிலவற்றை சேகரித்து, படம்பிடித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கடலில் உள்ள எரிமலை வெடிக்கும்போது வெளியாகும் வாயுகள் நிறைந்த சூடான லாவா, கடல்நீரால் குளிர்விக்கப்பட்டு பியூமிஸை உருவாக்குகிறது. இந்த பியூமிஸ் படலம் பசிபிக் கடலில் பல மைல் தூரத்துக்கு பரவிக்கிடப்பதாக கடல் பயணிகள் மைக்கேல் மற்றும் லாரிசா கூறுகின்றனர்.

மேலும் அதன் பரப்பளவை மன்ஹாட்டன், வாஷிங்டன், 20 ஆயிரம் கால்பந்து மைதானங்களின் பரப்பளவுடனும் ஒப்பிட்டுள்ளனர். அவர்கள் கொண்டுவந்த பியூமிஸ் துகள்களை ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்களின் அனுபவத்தை கேட்டறிந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியும் செய்து வருகின்றனர். இந்த பியூமிஸ் படலம் ஆஸ்திரேலியா நோக்கி நகருவதாக குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புவியியலாளரும் இணை பேராசிரியருமான ஸ்காட் பிரையன் தெரிவித்துள்ளார். இவர் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை குறித்தும் பியூமிஸ் குறித்தும் 20 ஆண்டுகளாக படித்து வருகிறார்.கடல் உயிரினங்கள் பியூமிஸ் படலம் மீது அமர்ந்து நாடு விட்டு நாடு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கடற்கரையிலிருந்து ஆயிரத்து 400 மைல் தூரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை புவி வெப்பமயமாதலால் சிதைவடைந்து வருகிறது. இவற்றை செறிவூட்டி ஆரோக்கியமானதாக்க பியூமிஸ் துகள்களால் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசா செயற்கைக்கோளும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்த பியூமிஸ் படலத்தை கண்டறிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்