உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவே அரசு திடீர் முடிவு: கணேசன், தலைமை செயலக சங்க முன்னாள் தலைவர்
2019-08-26@ 04:02:24

ஒவ்வொரு மாவட்டத்தை பிரிப்பது நிர்வாக ரீதியாக நல்ல விஷயம் தான். ஆனால் இதில் அரசியல் கலந்து இருக்கக்கூடாது. மாவட்டத்தை பிரிப்பதற்கு முன்னர் கட்டாயமாக மக்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு என்ன தேவையோ மக்களுக்கு என்ன நன்மையோ அதன் படி தான் பிரிக்க வேண்டும். தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அதை பிரித்து மயிலாடுதுறையை மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். எனவே மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை தான் செய்ய வேண்டும். அதற்காக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள் ஆனால் அதை கண்டு கொள்ளவே இல்லை. மக்களுடைய கருத்துகளை கேட்காமல் மாவட்டத்தை பிரிப்பது மிகப்பெரிய தவறு.
உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என காலக்கெடு வைத்துள்ளது. ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவதை குறிக்கோளாக வைத்துள்ளனர்
தற்போது ₹4 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் இருந்து மானியம் வரவேண்டியுள்ளது. காரணம் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய மானியம் வரவில்லை. இதனால் உள்ளாட்சி மன்றத்தின் அடிப்படை பணிகள் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை அமைத்தல் போன்றவற்றிற்கு ஊராட்சி மன்றத்திற்கு அடிப்படை தேவை பணம். ஆனால், அதுவே வரவில்லை என்றால் எப்படி செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள் எல்லாம் தலைவிரித்தாடுகிறது.
தற்போது மழை பெய்துள்ளது அதை சேமிக்க வேண்டிய கட்டமைப்புகள் செய்யவில்லை. தற்போது குடிமராமத்து பணி ஆரம்பித்திருக்கிறார்கள். முன்கூட்டியே முடித்திருந்தால் காவிரியில் தண்ணீர் கடைமடை பகுதிக்கு சென்றிருக்கும். அதை சரியாக செய்யவில்லை. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத அரசு மாவட்டத்தை பிரித்து என்ன பயன். உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. அடுத்தடுத்து மாவட்டத்தை பிரிக்கிறார்கள்; மாவட்டம் முழுவதும் வளர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பில்லை. ஒருபக்கம் வளர்ச்சி அடைந்திருக்கும் மற்றொரு பக்கம் வளர்ச்சி அடையாமல் இருக்கும். அப்படி இருக்கும் போது வளர்ச்சி அடைந்த பகுதியை ஒரு மாவட்டமாகவும், வளமில்லாத மற்றொரு பகுதியை இன்னொரு பகுதியாகவும் பிரிக்கும் போது அதில் என்ன லாபம்? அந்த மாவட்டத்திற்கு வருவாய் குறைந்து விடும்.
நாடாளுமன்ற தேர்தலின் போது முதல்வர் ஒரு அறிவிப்பு செய்தார். அப்போது எங்களுக்கு வாக்களித்தால் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கப்படும் என்று கூறினார். ஆனால் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தொகுதியை கைப்பற்றியது. ஆனால் உடனடியாக மூன்றாக அறிவிக்கின்றனர். இதனால் அரக்கோணம் தொகுதி மக்கள் அனைவரும் வருத்தப்படுகிறார்கள். . அதைப் போன்று மயிலாடுதுறை பகுதி மக்களும் போராட்டம் செய்தனர். போராட்டம் நடத்தும் பகுதி மக்களுக்கு என்ன தேவையோ, அதை செய்து தரும் அரசாக இருக்க வேண்டும். இது மக்களுக்கான அரசாக இல்லை. அவர்களுக்கான அரசாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்துடன் தான் மாவட்டத்தை பிரிக்கிறார்கள். மாவட்டத்தை பிரிக்க முயற்சி செய்யும் போது உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடாமல் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது.
மேலும் செய்திகள்
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா..! நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு!!
ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள் :அர்ஜுனமூர்த்தி கருத்து
ஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்...! நினைவிட திறப்பு விழாவில் ஓபிஎஸ் பேட்டி
ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் கட்சி திமுக தான் : திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!