SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீகாரில் 30 ஆண்டுகளாக நடந்த முறைகேடு ஒரே சமயத்தில் 3 அரசு வேலை: மோசடி ஊழியருக்கு போலீஸ் வலை

2019-08-26@ 00:23:26

கிஷன்கஞ்ச்: பீகாரில் 30 ஆண்டுகளாக அரசில் 3 பொறுப்புகளை வகித்து, மாதம் 3 சம்பளம் வாங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.பீகாரை சேர்ந்தவர் சுரேஷ் ராம். அரசின் வெவ்வேறு துறைகளில் ஊழியராக தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இதற்காக, மாதம்தோறும் அரசிடம் இருந்து அவர் 3 சம்பளத்தையும் பெற்று வந்துள்ளார். மேலும், இவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு உள்ளது. பொதுப்பணித் துறையில் கட்டுமான துறை உதவி பொறியாளராகவும், பங்கா மாவட்டத்தில் நீர் வளத்துறை அதிகாரியாகவும், பீம்நகர் பகுதியிலும் நீர்வளத் துறை அதிகாரியாகவும் இவர் இருந்துள்ளார்.

இந்நிலையில், பீகாரில் நிதியமைச்சகம் மூலமாக ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறை சமீபத்தில்  கொண்டு வரப்பட்டது. இதில், ஊழியரின் பெயர், பிறந்த தேதிகளை சரிபார்த்த போது இவர் சிக்கினார். ஒரே பெயர், ஒரே பிறந்த தேதியை இவர் 3 இடங்களிலும் கொடுத்திருந்தார். இது நெருடலை ஏற்படுத்தியதால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அரசு பணியாற்றுவதற்கான முழுமையான ஆதாரங்களுடன் விசாரணைக்கு வருமாறு சுரேஷ் ராமுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால்,  சுரேஷ் ராம் பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை மட்டுமே எடுத்து  வந்துள்ளார். இதனால், அதிகாரிகள் அவரை அனைத்து ஆவணங்களையும் கொண்டு வருமாறு  திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து, அவர் மாயமாகி விட்டார். இதையடுத்து சுரேஷ் ராமை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்