அரசு டாக்டர் வீட்டில் புகுந்து 197 பவுன் நகை கொள்ளை
2019-08-23@ 01:30:21

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருபவர் மாரிமுத்து. இவரது வீடு, ஊத்தங்கரை-சேலம் மெயின்ரோட்டில் உள்ளது. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லை. சென்னை சென்றிருந்த தேவேந்திராவும் மகனும் இரவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 197 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். பட்டப்பகலில், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வீட்டில் புகுந்து 50 லட்சம் மதிப்பிலான 197 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை விமான நிலையத்தில் எலக்ட்ரீஷியன் கைது
அரசு ஊழியர் வீட்டில் 45 சவரன் திருட்டு
கோயில், சர்ச், வீடு உள்பட 8 இடங்களில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
பேஸ்புக் மூலம் நட்பாக பழகி நூதன முறையில் வழிப்பறி: 4 பேர் கைது
வியாசர்பாடி காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு
தி.நகரில் உள்ள பிரபல நகை கடையில் 5 கிலோ தங்கம் திருட்டு: வடமாநில ஊழியருக்கு வலை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!