நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்
2019-08-22@ 17:21:37

வெலிங்டன்: நியூசிலாந்தில் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவரது குழந்தைக்கு சபாநாயகர் புட்டிப் பாலூட்டினார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பியாக இருப்பவர் டமாடி கோபி. இவருக்கு கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் தனது குழந்தை ஸ்மித்துடன் நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்தார். தனது குழந்தையை தூக்கி வைத்துக்ெகாண்டே சபையில் விவாதத்தில் பங்கேற்றார். இதைக் கண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்ட், குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்து பாட்டிலில் பாலூட்டினார்.
இவரின் இந்த செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. தற்போது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பொதுவாக சபாநாயகர் இருக்கை என்பது அவையை நடத்துபவர்களுக்கு உரியது. ஆனால் இன்று ஒரு மிக முக்கியமான மனிதர் என்னுடன் இந்த நாற்காலியை பகிர்ந்து கொள்கிறார். எம்.பி. டமாடி கோபி மற்றும் அவரது மனைவி டிம் இருவருக்கும் உங்களது குடும்பத்தின் புதிய வரவுக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு: 21.64 லட்சம் பேர் உயிரிழப்பு
நாயிடம் பால் குடிக்கும் பூனைக்குட்டி..! வைரலாகும் வீடியோ...
இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஆவலாக இருந்தேன்...ஆனால் கொரோனா என்னை தடுத்துவிட்டது : இங்கிலாந்து பிரதமர் உருக்கம்
உருமாறிய கொரோனாவையும் எதிர்க்கும்...! தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள்: மாடர்னா நிறுவனம்
உலகத்தை மிரட்டி வரும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு
ஒரே நேரத்தில் 143 செயற்கைகோளை ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ்எக்ஸ்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!