SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவன் அமெரிக்காவின் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

2019-08-22@ 10:17:48

அமெரிக்கா: அமெரிக்காவின் கார்ட்டர் லேக் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவர் சுமேத் மன்னார் என்பவர் உயிரிழந்தார். 90 அடி ஆழத்தில் சேற்றில் சிக்கிய அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஜம்பிங் ஜாக் பகுதிக்கு சென்ற 27 வயது மாணவர் சுமேத், வீடு திரும்பாததால் அவரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 25 அடி உயர பாறையில் இருந்து குளத்தில் குதிப்பது இங்கு சாகச விளையாட்டு.

குளத்தில் குதிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பதால் பலரும் இங்கு விளையாடுவது வழக்கமாக உளளது. கோடைக்காலங்களில் பனி உருகி நீர் அதிகமாக காணப்படும் என கூறப்படுகிறது. சுமேத் மன்னார் நீரில் மூழ்கியது உறுதியானதும் அவரை காப்பதற்காக முதலில் உயிர் காக்கும் மிதவைகளையும் ரப்பர் வளையத்தையும் நீருக்குள் வீசினர். பின்னர் மீட்புக் குழுவினர் பல மணி நேரம் நீருக்குள் மாணவரின் உடலைத் தேடினர்.

இரவு நேரமாகி விட்டதால் மீட்பு முயற்சி கைவிடப்பட்டது என கூறப்படுகிறது. மீண்டும் காலையில் தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீச்சல் வீரர்கள் 90 அடி ஆழத்தில் ஒரு பாறையில் சிக்கி மாணவர் சுமேத் உடல் கிடப்பதை கண்டுபிடித்து அதனை மீட்டனர். பின்பு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்