SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாட்டு பயணத்துக்கு முன்பாக அதிகாரிகளுக்கு விவிஐபி நடத்திய பாடம் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2019-08-21@ 00:21:00

‘‘என்ன தீபமானவர் திடீர் திடீர்னு குண்டு போடற மாதிரி பேசுறார்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பல நூறு கோடி வரும்... ஆனா, இப்போது இருக்கும் கடன் பிரச்னையை எல்லாம் தீர்த்துவிடலாம் என்பதற்காக கட்சியை கலைத்தார். தொண்டர்களை போலீசை வைத்து மிரட்டினார். நெருக்கமாக இருந்த ‘கிங்’ ஆனவரை டிரைவர் ஆள்  வைத்து மிரட்டுகிறார்... நானும் இலை கட்சியில் சேர்கிறேன் என்று நாளுக்கு ஒரு அறிக்கை விட்டு பார்த்தார்... இலை தரப்பில் இருந்து வரவேண்டிய பெரிய தொகை இன்னும் வரவில்லை. கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெறிக்க...  சூடாகிப்போன தீபமானவர் போயஸ்கார்டன் வீடு இலையின் சொத்து அல்ல... எங்களுக்கு சொந்தமானது. அதை எப்படியும் மீட்பேன் என்று சபதம் போட்டு இருக்கிறார். எல்லாம் பணம் செய்யும் மாயம் என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்டத்தில் கிப்டுக்கு பின்னடைவுன்னு சொல்றாங்களே உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவிலிருந்த கிப்ட்காரரிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாம். அமமுக நெல்லையில் படு ஸ்ட்ராங்காக இருந்த போது அடிக்கடி நெல்லைக்கு விசிட் அடித்தவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தான்  சென்றுள்ளார். வேலூர் மக்களவை தேர்தலுக்கு முன்பாக வேலூர் தேர்தல் உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியில்லை என கிப்ட்காரர் ஒதுங்கிக் கொண்டார். இதனால் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் பணியை முதலில் துவக்கிய  அமமுகவினர் சுவற்றில் அடித்த பந்தாக பின் வாங்கிக் கொண்டனர். இந்நிலையில் நெல்லையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவிப்புக்காக வந்த கிப்ட்காரர், கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைத்தால் நாங்குநேரி இடைத்தேர்தலில்  போட்டியிடுவேன் என சமாளித்து பேசிவிட்டு கிளம்பினார். கிப்ட்காரர் தனது கட்சிக்காரருக்கு சொந்தமான அங்குள்ள சொகுசு பங்களாவில் தங்கியிருந்த போது, நாங்குநேரியில் அமமுக வலுவாக உள்ளது. அமமுக நின்றால் அதிமுகவை  நிச்சயம் தோல்வியடையச் செய்யலாம் என கிப்ட்காரரிடம் அவரது கட்சியினர் படமெல்லாம் போட்டு விளக்கினார்களாம். அதனால் தான் தனது முடிவை திடீரென மாற்றிக் கொண்டாராம்... அதை பக்கத்தில் இருந்து கேட்டவர்கள் ஏற்கனவே  அல்வா மாவட்டம் கட்சிக்கு அல்வா கொடுத்துவிட்டது... இப்போது நாங்குநேரியில் நின்று கட்சியின் செல்வாக்கு நார்நாராக கிழியப்போகிறது...’’ என்று பேசிக் கொள்கிறார்கள் என்றார் விக்கியானந்தா.

‘‘தீர்மானம் போடறதுக்கு மட்டும் அனைத்து கட்சிகள் வேண்டும். ஆனால் அதை நிறைவேற்ற சொல்ல மாட்டேன்னு சொல்றது என்ன நியாயம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். எதிர்கட்சிகளின் வாய் மூட வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சி தீர்மானத்தை நிறைவேற்றப்படுவதாக தலைமை செயலகத்தில் பேசிக்கிறாங்க... அந்த தீர்மானத்தை  சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவதோடு தங்கள் பணியை முடித்து கொள்கிறார்கள். இதனால் நெருப்பாக எரியும் விஷயத்தை அப்படியே சில மாதங்களுக்கு ஆறப்போடுறாங்க... அது நீதிமன்ற படி ஏறும்போதுதான் இலை கட்சியின்  தில்லாலங்கடி வெளிச்சத்துக்கு வருது... அப்படி வெளியே வந்து சிக்கிய இரண்டு விஷயங்கள் நீட் தேர்வும், ஏழு பேர் விடுதலை விஷயத்தையும் தலைமை செயலகத்தில் உள்ளவர்கள் சுட்டிகாட்டுகிறார்கள். இதனால் இலை ஆட்சியில்  அனைத்து கட்சி தீர்மானம் என்றால் அனைத்தையும் ‘ஆப்’ செய்து வைப்பது என்றே எடுத்துக் கொள்ளலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தன் துறையில் நடப்பதை ஒரு அமைச்சர் ஓபனாக ஒத்து கொண்டதை பார்த்தீர்களா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம். அந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளில் பலர், அமைச்சர் நம்மை திட்டப்போகிறார் என்று நினைத்தார்களாம். ஆனால் அவரோ, சமீபத்தில் நடந்த சர்வேயில் நம்ம பசங்க கணக்குல ரொம்ப வீக்கா இருக்காங்க... இதே நிலைதான்  இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் இருக்கு.. அவர்களும் கணக்கில் வீக்காக இருக்காங்க... அதனால வெளிநாட்டு திட்டம் ஒன்றை தமிழகத்தில் ஏற்கனவே தேனியில சிறப்பாக செயல்படுத்திட்டு வர்றாங்க...அதையே தமிழகம் முழுவதும்  செயல்படுத்தப்போறோம்னு சொன்னாராம். அதை கேட்ட அதிகாரிகள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கூட்டத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்தாங்களாம். எனினும் சில கணக்கு டீச்சர்கள், கணிதமேதை ராமானுஜம் பிறந்த  மண்ணில் கணக்கு தெரியாத கொடுமையை என்னவென்று சொல்வது என்று வேதனையுடன் சென்றனர்.

‘‘அப்புறம்’’‘‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரை சந்தோஷப்படுத்த வருவாய் துறையினர் கஷ்டப்பட்டு பல்வேறு துறைகளின் பெயர்களை இணைத்து அம்மா என்ற பெயர் ஆங்கிலத்தில் வரும் வகையில் கொண்டு வந்த திட்டத்துக்கு மூடு  விழா நடந்ததா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம். அம்மா என்ற வருவாய் துறையின் திட்டத்தை சேலம்காரர் மாற்றிவிட்டு முதல்வர் என்ற பெயரில் திட்டத்தை துவக்கி வைத்துள்ளாராம். இந்த திட்டத்தின்படி அனைத்து துறை அதிகாரிகள் மக்களின் வீடுகளுக்கு சென்று குறைகளை  கேட்பாராம். பலரும் அம்மா திட்டம் என்று பெயர் வைப்பார்கள் என்று நினைக்கையில் அந்த திட்டத்தின் பெயரை மாற்றியதில் கரை வேட்டிகள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.. அத்துறையின் அமைச்சர் உள்பட இலை கட்சியின் மூத்த  நிர்வாகிகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘சேலம்காரர் வெளிநாட்டு பயணத்துக்கு ரெடியாகிட்டாரா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சேலம்காரர் வெளிநாட்டுக்கு போவதற்கு முன்பாக தனக்கு வேண்டிய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளை அழைத்து ேபசினாராம். நான் வரும் வரையில் இங்கிருந்து தினமும் அரசியல் மற்றும் நிர்வாக தகவல்கள் வந்து கொண்டே  இருக்க வேண்டும். நான் இல்லாதபோது யாராவது மாற்று பிளானை செயல்படுத்த நினைத்தால் நீங்கள்தான் தடுக்க வேண்டும். அப்படி ஏதாவது நடப்பதாக இருந்தாலும் அதையும் நீங்களே என் சார்பாக சமாளித்து வீழ்த்திய தகவலை தர  வேண்டும். இதற்காக என்னை வெளிநாட்டில் இருந்து வரச் சொன்னால் என் அரசியல் ‘கெத்’ வீழ்ந்துவிடும். எனவே நான் இல்லாவிட்டாலும் என் கை அரசியலில் ஓங்கியே இருக்க வேண்டும் என்று சொன்னதாக தகவல்... அதிகாரிகளும்  நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீங்கள் தைரியமாக சென்று வாருங்கள் என்று சொன்னதாக தற்போதுதகவல் வெளியாகி இருக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-gold25

  அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

 • 25-01-2021

  25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-01-2021

  22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்