SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா லெவன் அபாரம்

2019-08-20@ 00:27:03

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இந்தியா லெவன் அணி வலுவான முன்னிலை பெற்றது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஆன்டிகுவா, நார்த் சவுண்டு  மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா லெவன் விளையாடியது. ஆன்டிகுவா, கூலிட்ஜ் மைதானத்தில் நடந்த  இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன் என்ற முதல் நாள் ஸ்கோருடன் டிக்ளேர் செய்செய்தது. புஜாரா 100*, ரோகித் 68 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி  முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு சுருண்டது (56.1 ஓவர்). கவெம் ஹாட்ஜ் 51, கார்ட்டர் 26, கேப்டன் ஹாமில்டன் 33 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர்.

இந்திய லெவன் பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 116 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய லெவன் அணி நிதானமாக விளையாடி ரன்  சேர்த்தது. அகர்வால் 13 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ரகானே - ஹனுமா விஹாரி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தது. விஹாரி 64 ரன் (125 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), பன்ட் 19 ரன் எடுத்தனர். இந்தியா லெவன் 56 ஓவரில் 3  விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்திருந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்