SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலிகள் உஷார்!

2019-08-20@ 00:14:00

போலி தயாரிப்புகள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வருவது கவலைக்குரிய விஷயம். இதனால் அரசுக்கும், நிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு ₹1.05 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக ‘ஆதென்டிகேஷன் சொல்யூஷன் புரவைடர்ஸ் அசோசியேஷன்’ என்ற அமைப்பு தகவல் வெளியிteட்டுள்ளது. முக்கியமாக, மருந்து, உணவு மற்றும் ஜவுளி பொருட்களில் போலி தயாரிப்புகள் அதிகளவு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. முறையான ஆய்வு, கண்காணிப்பு மூலம் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.மருத்து உற்பத்தி துறையில் அதிகளவு போலிகள் புழங்குவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது நேரடியாக மனித உயிர்களுடன் விளையாடும் செயல். போலிகளை கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், போலிகளை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் உணவு மற்றும் மருந்து களை நுகர்வோர் மிகவும் கவனமாக வாங்க வேண்டியது கட்டாயம். மருந்துகளில் போலிகளை கண்டுபிடிப்பது சிரமமானது தான் என்றாலும், சில வழிமுறைகளை பின்பற்றி கண்டறியலாம்.

அதாவது, மருந்து பாட்டிலின் மூடியில் ஏதாவது கீறல் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அடிக்கடி வாங்கும் மருந்தின் விலை வழக்கமான விலையை விட குறைவாக இருந்தால் விசாரிக்க வேண்டும். சில நேரங்களில் மருந்து உட்கொண்ட பிறகு ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டால், உடனே மருத்துவர்களை பார்ப்பது நல்லது.மேலும், உணவு பொருட்களின் மீது போலி ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது. அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம். போலி தயாரிப்புகளை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், நுகர்வோருக்கு சிக்கல் ஏற்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் போலி தயாரிப்புகளை சந்தையில் விற்பனை செய்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். போலி தயாரிப்புகளுக்கு பின் மிகப்பெரிய நெட்வொர்க் செயல்படுகிறதாம். மருந்துகளில் போலி தயாரிப்புகளை கண்டுபிடிக்க ரகசிய குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும். அந்த குழு போலி மருந்து, உணவு பொருட்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது? நாட்டின் எந்தெந்த பகுதிகளுக்கு அதிகமாக அனுப்பப்படுகிறது? சந்தையில் அவற்றை எவ்வாறு நுழைக்கின்றனர் என்பதை கண்டறிய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே போலி தயாரிப்புகளை கட்டுப்படுத்த முடியும்.உணவு, மருந்து தயாரிப்பில் போலிகள் இருப்பது மனித ஆரோக்கியத்திற்கும், எதிர்காலத்துக்கும் மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும். இதனால் இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்