ஆன்லைன் விற்பனையை அதிகரிக்க முயலும் நிறுவனங்கள்: கைகொடுக்குமா பண்டிகை சீசன்?
2019-08-19@ 10:58:11

சென்னை: பண்டிகை சீசனில் செல்போன் , மின்சாதனங்கள் போன்றவற்றின் விற்பனையை அதிகரிக்க இணையதள வழி வணிக நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக சந்தை படுத்துதலின் வடிவமும் மாற்றம் கண்டு இணையதளம் வாயிலாக பெரும் அளவில் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றனர். அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வணிக நிறுவனங்கள், இந்த முறையில் மின்சாதனங்கள் என தொடங்கி மளிகை பொருட்கள் வரை அனைத்தையும் விற்கின்றனர்.
சீசனுக்கேற்ப பொருட்களை சந்தைப்படுத்தும் முறையையும் இந்நிறுவனங்கள் கையாண்டு வருகின்றனர். இந்த வகையில் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து வரும் பண்டிகை காலத்தில் செல்போன்கள் , மின்சாதனங்கள், அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட வற்றின் விற்பனையை அதிகரிக்க முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்காக இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் செய்திருக்கும் ஆர்டர்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பண்டிகை காலங்களில் பொருட்களுக்கு வழங்கப்படும் மிகுதியான தள்ளுபடியின் காரணமாக வழக்கமான விற்பனையை விட 40 சதவீதம் அதிகமாக இருக்கும் என இந்நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்; 234 தொகுதிக்கும் தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு: அரசிதழிலும் வெளியிடப்பட்டது
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உட்பட 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது
தொடர்ந்து 60 தொகுதி கேட்டு பிடிவாதம்: பாஜகவை பழி தீர்க்க அதிமுக புதிய திட்டம்.!!!
பேரறிவாளன் விவகாரத்தில் நடப்பது என்ன?.. உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்?
நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 523 பேர் பாதிப்பு: 595 பேர் குணம்; 5 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!