SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீடுகளை விற்க முடியாமல் தொழிலுக்கு பலரும் முழுக்கு: கோ.வெங்கடாச்சலம், சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தலைவர்

2019-08-19@ 00:45:19

கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான துறையில் கட்டிடம் கட்டி விற்பனை செய்து வந்த புரமோட்டார்கள் 100 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் பேர் தொழிலுக்கு முழுக்கு ேபாட்டு விட்டு போய்விட்டார்கள். அதேபோன்று காண்ட்ராக்டர்கள் தனியார் ஒப்பந்த கட்டுமானதாரர்கள் 60 சதவீதம் பேர் வேலையை இழந்துள்ளனர். ேமலும் அந்த வேலையை நம்பியிருக்கிற ஊழியர்கள், மண்எடுப்பவர்கள், கம்பி கட்டுபவர்கள், கான்கிரீட் போடுபவர்கள், எல்க்ட்ரீசியன், டைல்ஸ் ஒட்டுபவர்கள், ஆசாரிகள், கட்டுமான அளவியலாளர்கள், இன்டிரீயர் வேலை செய்பவர்கள் என 18 வகையான ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். இதனால் சென்னைபோன்ற நகரங்களில் இருப்பவர்கள் வேலையை செய்ய முடியாமல் காலி செய்து விட்டு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இது மிகப்பெரிய சரிவு என்றே சொல்லலாம்.   தற்போது கட்டுமான தொழிலில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடக்கவில்லை. புதிய கட்டிடங்கள் கட்டி விற்கும் பணியில் 100 சதவீதத்தில் 2,3 சதவீதம் தான் பூஜை போடுகின்றனர். ஏற்கனவே கட்டி முடித்த அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி முடித்து விற்க முடியாமல் வங்கிகள் பறிமுதல் செய்யும் நிலை முன்பை விட 2 மடங்கு அதிகமாகியுள்ளது. சிலபேர் நஷ்டத்தில் கூட கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நேரத்தில் வீடு, மனைகள் வாங்குபவர்கள் குறைவான விலைக்கு வாங்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. தற்போது சென்னையில் மட்டும்  90 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் விற்பனை செய்யாமல் உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி வெளிநாட்டிற்கு சென்று முதலீடுகளை பெற முயற்சி செய்வதாக தெரிய வந்துள்ளது. இதை பார்க்கும் போது, கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதாக உள்ளது. இங்கே மிகப்பெரிய பணச்சுரங்கம் கட்டுமான துறை. இதை சரியாக கொண்டு சென்றால் அரசுக்கு மிகப்பெரிய வருமானம், எந்த மாதிரியான வருவாய் கிடைக்கும் என்றால் கட்டுமான துறையில் பேப்பர் கொடுத்த உடனே 5, 10 நாட்களில் அப்ரூவல் வந்தால் உடனடியாக கண்ட்ரக் ஷன் இடத்துக்கு சென்று விடும். அதைப்போன்று எப்எஸ்ஐ அறிமுகப்படுத்தினார்கள். அது இன்னும் முழுமையாக அமுலுக்கு வரவில்லை இழுத்துக் கொண்டு தான் செல்கிறது. அதாவது பில்டிங் கட்டுபவர்கள் இன்ஜினியர் அனுமதியில்லாமல் கட்டக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்துள்ளனர், அதில் சில குறைபாடுகள் உள்ளது. அதை என்ன செய்யவேண்டும் என்றால் தமிழகத்தில் எங்கு பதிவு செய்தாலும் அவர்  எங்கு வேண்டுமானாலும் கையெழுத்து போடுவதாக இருக்க வேண்டும். அது இல்லாததால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு இடத்திலும் பதிவு செய்வதால் தாமதம் ஆகிறது. மத்திய அரசு காண்ட்ராக்டருக்கு ஜிஎஸ்டி வரியை 2 சதவீதம் குறைக்க வேண்டும்.

மொத்தத்தில் ஒப்பந்ததாரர், நியமன பதிவாளர்கள் 10 சதவீதம் தான் லாபம் எடுக்க முடிகிறது. அதில் 5 சதவீதம் மேற்பார்வைக்கும், சைட் செலவுக்கும் போய்விடுகிறது. லாபம் 5 சதவீதம் கூட கிடைக்காது. அதையும் விரைவில் முடித்து கொடுத்தால் தான் லாபம் கிடைக்கும். இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டி கட்டச் சொல்லும் போது வாடிக்கையாளர்கள் கூடுதல் பாரமாக நினைக்கிறார்கள்.  2 சதவீதம் மட்டும் மத்திய அரசு ஜிஎஸ்டி கட்ட சொன்னால் நன்றாக இருக்கும். காண்ட்ராக்டர்கள் அனைவரும் ஜிஎஸ்டி கட்டுவார்கள், இதையெல்லாம் போர்க்கால அடிப்படையில் செய்தால் தான் கட்டுமான தொழிலை காப்பாற்ற முடியும்.வீடு, மனைகள் வாங்குபவர்கள் குறைவான விலைக்கு வாங்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. தற்போது சென்னையில் 90 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் விற்பனை செய்யாமல் உள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்