இந்தியாவில் 80 ஆப்ஸ்கள் இருந்தும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் சீனாவை முந்த முடியவில்லை
2019-08-19@ 00:44:35

புதுடெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள 80 ஆப்ஸ்கள் இருந்தாலும் கூட, இரண்டே இரண்டு ஆப்ஸ்களை கொண்டுள்ள சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரொக்கப் பண பரிவர்த்தனையை முற்றிலும் போக்கும் வகையில், பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் எளிதான டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள யுபிஐ வசதி கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது இந்தியாவில் பேடிஎம், அமேசான், கூகுள் பே என 80க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்ஸ்கள் செயல்படுகின்றன.இதுதவிர, பேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளத்திலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் முழுமையாக கொண்டு வரப்பட உள்ளது. இவ்வளவு இருந்தும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் சீனாவுடன் இந்தியா போட்டி போட இன்னும் வெகு தூரத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சீனா டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அங்கு இந்தியாவைப் போல் அல்ல. அலிபே, வீசேட் பே ஆகிய 2 ஆப்ஸ்களே பிரதானமாக உள்ளன. எந்த தொழில் தொடங்கினாலும், டிஜிட்டல் வேலட் அவசியமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 80 ஆப்ஸ்கள் இருந்தாலும், டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டவில்லை. இதுவே சீனாவில் வீசேட் பே ஆப்சில் பரிவர்த்தனை செய்பவர்கள் மட்டுமே 80 கோடி. இந்திய கிராமங்களில் இன்னமும் ரொக்க பரிவர்த்தனை அதிகளவில் நடப்பதே டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் சீனாவை நம்மால் முந்த முடியாததற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கிராமப்புற நுகர்வோரில் 72 சதவீதம் பேர் ரொக்க பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இது சீனாவுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும். இணைய சேவை இல்லாததால் கிராமப்புற வணிகர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.இது குறித்து யுபிஐ சேவையை நிர்வகித்து வரும் தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் (என்பிசிஐ) தலைமை செயல் அதிகாரி திலீப் அஸ்பே கூறுகையில், ‘‘அடுத்த 5 ஆண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50 கோடியாக்குவதே இலக்கு. இந்தியாவில் ஏராளமான டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்ஸ்கள் இருந்தாலும், நாம் சீனாவுடன் போட்டி போட இன்னும் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. சீனாவைப் போல் அல்லாமல் இங்கு, சிறிய மற்றும் பெரிய டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்ஸ் நிறுவனங்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படும். நுகர்வோர் தங்களுக்கு ஏற்ற ஆப்ஸ்களை பயன்படுத்த தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்
அமெரிக்க அதிபர் பதவியேற்பு காரணமாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!: வரலாற்றில் முதல்முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்..!!
ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கம்: சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.37,528-க்கு விற்பனை
தட்கலில் காஸ் சிலிண்டர் பெற கூடுதலாக ரூ25 கட்டணம் வசூல்
2-வது நாளாக ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.37,152-க்கு விற்பனை
சற்றே அதிகரித்த தங்கம் விலை : சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ.36,976-க்கு விற்பனை!!
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!