SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

16ம் தேதி கல்லணை திறப்பு: 30 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்...பேராவூரணி பகுதி விவசாயிகள் கோரிக்கை

2019-08-14@ 19:32:39

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்ப கல்லணையில் இருந்து தொடர்ச்சி 30 நாட்கள் முழு கொள்ளளவு தண்ணீரை திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். மேட்டூர் அணை நேற்று திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வரும்16ம் தேதி அதிகாலை கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் காலை கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி கல்லணையில் உள்ள அனைத்து மதகுகளும் சரிசெய்யப்பட்டு, கல்லணையில் உள்ள கோயில்கள், கரிகாற்சோழன் சிலை ஆகியவை புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கல்லணை கால்வாய் விவசாயிகள் கூறும்போது, கல்லணையில் இருந்து முழு கொள்ளளவான 4,500 கன அடி தண்ணீர் திறந்தால் தான் கடைமடை வரை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். கல்லணையில் இருந்து வரும் தண்ணீர் ஈச்சன்விடுதி என்ற இடத்தில் பிரியும் வாய்க்கால் வழியாக நவக்குழி என்ற இடத்தில் புதுப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு இருபிரிவுகளாக வந்து சேர்கிறது. ஈச்சன்விடுதியில் 450 கன அடி முழு கொள்ளளவு தண்ணீர் எடுத்தால் தான் கடைமடையை தண்ணீர் எட்டி பார்க்கும். முறை வைக்கப்படாமல் தொடர்ச்சியாக 30 நாட்கள் தண்ணீர் வந்தால் தான் ஏரி, குளங்களை நிரப்ப முடியும். சிறு சிறு குளங்கள் மற்றும் ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர், பெருமகளூர், சோலைக்காடு, விளங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள 1,500 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே உள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பினால் தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது கடைமடையில் நீர்மட்டம் 250 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதற்கு கடைமடை பகுதியில் இதுவரை போதுமான மழை பெய்யாததே காரணம். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் மழை பெய்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதை பயன்படுத்தி ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பும் வரை இன்னும் 30 நாட்களுக்கு கடைமடை பகுதிக்கு முறைவைக்காமல் தொடர்ச்சியாக ஆறுகளில் முழு கொள்ளளவு தண்ணீர் வழங்க வேண்டும். முழுமையாக முறை வைக்காமல் தண்ணீர் வழங்கினால் ஒருபோக சம்பா சாகுபடிக்கு நாற்று விடும் பணிகள் தொடங்கிவிடும். அதேநேரம் ஏரி, குளங்களும் முழுமையாக நிரம்பி விடும். எனவே கடைமடை பகுதிக்கு கவனம் செலுத்தி 30 நாட்களுக்கு முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க ேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்