SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கை தந்த பாடம்

2019-08-14@ 00:43:30

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக துவங்கினாலும், நீலகிரி மக்களின் வாழ்வாதாரத்தை தலைகீழாக புரட்டிப்போட்டு விட்டது. இங்குள்ள அவலாஞ்சியில் கடந்த ஆகஸ்ட் 7ம்தேதி ஒரே நாளில்  82 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. அதே நாளில், அப்பர்பவானியில் 30 செ.மீ, கூடலூரில் 24.1  செ.மீ மழை பதிவானது. மறுநாள் அவலாஞ்சியில் மீண்டும் 91 செ.மீ மழை  பதிவாகி, பெரும் ஆச்சரியத்தை  ஏற்படுத்தியது. இது, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 101 ஆண்டுகளில் இல்லாத  பெருமழை ஆகும்.  நீர் வழித்தடங்கள் முற்றிலும் மனித ஆக்கிரமிப்பால் சிறைப்பிடிக்கப்பட்டு விட்டதால், ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. 30க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு. இதன்காரணமாக, கடந்த ஒரே வாரத்தில் ஆறு ேபர் உயிரிழப்பு. 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துவிட்டது. வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலை. ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 2,400 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள் சேதம், விளைநிலங்கள் நாசம் என நீலகிரி மக்கள் படும் துயரத்துக்கு அளவே இல்லை. குறிப்பாக, கூடலூர் பகுதி மக்களுக்கு கடும் பாதிப்பு.  

ஊட்டி- கூடலூர் இடையே அனுபாபுரம் சாலையில் பெரும் மண்சரிவு ஏற்பட்டதுடன், தார்ச்சாலை இரண்டாக பிளந்தது. போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. தென்னிந்தியாவின் தண்ணீர் தொட்டியாக விளங்கும் நீலகிரிக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒரு குளிர்பிரதேசத்தை, இயற்கையை நாசப்படுத்தி, செயற்கையான கட்டிடங்கள் உட்பட பல வகையில் காடு, மலையை வெப்ப மண்டலமாக மாற்றிய காரணத்தால, மனித வாழ்வுக்கு இன்று பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இயற்கை, தனக்கென எதையும் வைத்துக்கொள்வதில்லை. நாம் கொடுப்பதைத்தான் அது, நமக்கு திருப்பி தருகிறது. இயற்கையை நேசிப்போம், பராமரிப்போம், பாதுகாப்போம், ஒன்றிணைந்து வாழ்வோம். இயற்கையின் சீற்றத்தில் இருந்து விடுதலை பெறுவோம்.

இந்த அறிவுரையோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. மழை வெள்ள பாதிப்பால் துடி துடிக்கும் நீலகிரி மக்களையும், அவர்களது உடமைகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்கவேண்டியது தமிழக அரசின் கடமை. நீலகிரி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வுக்கூட்டம் நடத்தி முடித்துள்ளார். நிவாரண பணிகளுக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி, நீலகிரி மக்களை காக்கவேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

 • vilaaaa_neeemm

  அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

 • 26-01-2021

  26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்