அலுவலகம் உனக்கா? எனக்கா? அதிமுக - அமமுக மல்லுக்கட்டு : பெரியகுளம் கோட்டாட்சியரிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு
2019-08-14@ 00:13:21

பெரியகுளம்: தேனியில் இருந்து போடி செல்லும் சாலையில் முன்னாள் ஜெயலலிதா இருந்தபோது, கடந்த 2015ல் அதிமுக அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்திற்கான இடம் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பெயரில் வாங்கப்பட்டது. அதில் 1,000 பேர் அமரும் வகையில் கட்டிடம் கட்டப்பட்டு, ஜெயலலிதா காணொலி காட்சி முலம் திறந்து வைத்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கட்சி உடைந்தது. இதனால் 2016க்கு பின்னர் அலுவலகம் பூட்டி கிடந்தது. இந்நிலையில் இந்த அலுவலகம் தங்களுக்கு சொந்ததமானது என்று கோரி, அதிமுக மற்றும் அமமுக கட்சியினர் பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்களை நேற்று சமர்ப்பித்தனர். அதிமுக சார்பில் கூடுதலாக ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டது. அமமுக சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கோட்டாட்சியர் ஜெயப்பிரீத்தா தேதி குறிப்படாமல் விசாரணையை ஒத்தி வைத்தார். இரு கட்சியினரும் ஒரே நேரத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூடியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
மேலும் செய்திகள்
சசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்கு அலைகின்றனர்: புகழேந்தி குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சி அமைக்குமா என இப்போது கூறமுடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் ராமதாஸ்: பாலகிருஷ்ணன் பேச்சு
பா.ஜனதாவில் சேர முடிவு புதுச்சேரி அமைச்சர்-எம்.எல்.ஏ ராஜினாமா: சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்
சொல்லிட்டாங்க...
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்