SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழைய ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் கொள்ளையரை மடக்கி பிடித்து மரத்தில் கட்டி வைத்திருப்பேன் : முகமூடி ஆசாமிகளை விரட்டியடித்த மூதாட்டி பேட்டி

2019-08-14@ 00:13:16

கடையம்: நெல்லை மாவட்டம் கடையம் அருகே  கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (72). விவசாயி. இவரது வீடு, கல்யாணிபுரம் மெயின் ரோட்டில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு. இவரது மனைவி செந்தாமரை (65). இவர்களது 2 மகன்கள், ஒரு மகள்  திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். கடந்த 11ம் தேதி இரவு 10 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 2 பேரை, சண்முகவேல், செந்தாமரை தம்பதி அருகிலிருந்த செருப்பு, சேர், ஸ்டூல் உள்ளிட்டவற்றை எடுத்து தாக்கி விரட்டியடித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.  இந்நிலையில் நேற்று காலை சண்முகவேல் வீட்டை மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார்  ஆய்வு செய்தார். அப்போது சண்முகவேல் மற்றும் செந்தாமரை தம்பதியை பாராட்டினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியர் கோயிலுக்கு சென்றிருந்தபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதையடுத்து வீட்டை சுற்றி 14 கேமராக்கள் பொருத்தப்பட்டன. தொடர்ந்து 6 மாதத்திற்கு முன்பு செந்தாமரை மட்டும் வீட்டில் இருந்தபோது மோட்டார் அறையருகே 2 மர்மநபர்கள் பதுங்கியிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து சண்முகவேல்  கூறுகையில், நானும், எனது  மனைவியும் பிள்ளைகளுடன்  போனில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது என் மனைவி  தண்ணீர்  கொண்டு வருவதற்கு உள்ளே சென்றார். நான் போனில் பேசி கொண்டிருக்கும் வரை எனக்கு பின்னால் மறைந்திருந்த கொள்ளையன், பேசி முடித்தவுடன் என் கழுத்தில் துண்டை போட்டு நெரித்துள்ளான். இது என் வாழ்நாளில் மறக்க முடியாதது. மேலும் தனியாக வாழும் முதியவர்கள் வீட்டில் கேமரா பொருத்த வேண்டும். மன தைரியத்துடன் வாழ வேண்டும். உடல்நலம் குன்றிய முதியோர் வாழும் வீட்டில் பிள்ளைகள் காவலாளிகள் நியமிக்க வேண்டும் என்றார்.

செந்தாமரை கூறுகையில், எனது கணவரின் முனகல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தேன். அங்கு அவரது கழுத்தை நெரித்தவன்  மீது  செருப்பை எறிந்தேன். தொடர்ந்து இருவரும் அரிவாளால் தாக்குதல் நடத்தியதில் என் செயினை பறித்தது  கூட எனக்கு தெரியாது. அவர்களை விரட்டிய பிறகுதான் செயினை பறித்துச் சென்றதும், என் கையில்  அரிவாள் வெட்டியதில் காயம் ஏற்பட்டதும் தெரிய வந்தது. என் கணவரை காப்பாற்றுவதில்தான் எனது முழு கவனமும் இருந்தது. நான் பழைய  உடல் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் 2 கொள்ளையர்களையும் பிடித்து மரத்தில் கட்டியிருப்பேன் என்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தாமரை ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு வரும்போது செயினை பறிக்க முயன்ற கொள்ளையனை 1 கிமீ தூரத்திற்கு விரட்டிச் சென்று மடக்கி மரத்தில் கட்டி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமிதாப், ஹர்பஜன் பாராட்டு

கொள்ளையர்களை முதிய தம்பதி விரட்டியடித்த சிசிடிவி கேமரா பதிவு நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைக்கண்ட பலரும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் பதிவில், முதிய தம்பதியின் தீரமிகுந்த செயலுக்கு தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பதிவில், திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும். வீரம், பாசத்துக்கு முன்னாடி நான் பனி, பகைக்கு முன்னாடி புலின்னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்ட பார்வை. முதிர்ந்த தம்பதிகளுக்கு பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்