SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஎன்பிஎல் குவாலிபயர்-2: மதுரைக்கு 176 ரன் இலக்கு

2019-08-14@ 00:07:45

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி20 தொடரின் 2வது குவாலிபயர் ஆட்டத்தில், மதுரை பேந்தர்ஸ் அணிக்கு 176 ரன் இலக்கை திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயித்தது. என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன் குவித்தது.  தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த் 51 ரன் (46 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஜெகதீசன் 50 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய சதுர்வேத் 35 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுக்க, சுமந்த் ஜெயின், ஆதித்யா அருண் டக் அவுட்டாகினர். முகமது 32 ரன்னுடன் (9 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மதுரை பேந்தர்ஸ் பந்துவீச்சில் கிரண் ஆகாஷ் 2, தன்வர், ஷா, கோகேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள பைனலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சந்திக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்