'இங்கிலாந்துக்கு ஒரு ரன் கூடுதலாக அளித்தது தவறுதான்' : நடுவர் தர்மசேனா ஒப்புதல்
2019-07-22@ 12:51:56

லண்டன் : உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான் என்று ஆட்டத்தின் நடுவர் தர்மசேனா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். லாக்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி ஆட்டத்தின் போது குப்தில் ஓவர் த்ரோ செய்த பந்து, ரன் எடுக்க ஓடிய ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றுவிட்டது. அப்போது தர்மசேனா வீரர்கள் ஓடிய 2 ரன்களையும் சேர்த்து மொத்தம் 6 ரன்கள் வழங்கினார்.
ஆனால் குப்தில் பந்தை எரிந்த போது ரஷீதும், ஸ்டோக்ஸ்-ம் இரண்டாவது ரன்னை முழுமை செய்யாதது ரீப்ளேவில் தெரியவந்தது. இதனை கவனிக்காத தர்மசேனா 1 ரன் கூடுதலாக அளித்துவிட்டார். இது இங்கிலாந்து வெற்றிபெற சாதகமாகிவிட்டது. நடுவர் தர்மசேனாவின் இந்த முடிவு சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தனது தவறை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; தொலைக்காட்சியில் பார்த்தபோதுதான் தவறு தெரிய வந்ததாக என்று பேட்டி அளித்தார். ஆனால் அதனை எண்ணி வருந்தவிலை என்று கூறியுள்ள இலங்கையை சேர்ந்த நடுவர் தர்மசேனா, தமது தீர்ப்பை ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது 14 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி
இலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு
சேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!