மக்கள் ஏற்றுக் கொள்ளாததை நாங்கள் ஏற்க மாட்டோம்: கனிமொழி எம்பி பேட்டி
2019-07-22@ 01:07:12

சென்னை: மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். சென்னை விமான நிலையத்தில் மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அப்படியென்றால், மத்திய அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். தமிழிசை சோலை வனத்தை பாலைவனமாக்கமாட்டோம் என கூறியிருக்கிறார். ஆனால் நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால் பெட்ரோலை உணவுக்குப் பதிலாக உண்ண முடியாது. எனவே அடிப்படையில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டுக்கு மிக மிக முக்கியமான ஒன்று. அதனால் தொழில் வளர்ச்சிக்கென தனியே பொருளாதார மண்டலம் இருப்பது போல், விவசாயத்துக்கு என தனியே விவசாய மண்டலம் ஒதுக்கப்பட வேண்டும். விவசாய மண்டலத்தில் மத்திய அரசு கை வைக்கக்கூடாது.
ஏனென்றால், இது எங்களுக்கு உணவு தரக்கூடிய விவசாய நிலம். அந்த நிலத்தில் நீங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றாதீர்கள் என்பதைத்தான் மறுபடி மறுபடி தமிழக மக்கள் சொல்லி கொண்டிருக்கின்றனர். சேலம் 8 வழி சாலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக, அதிவேக சாலை என அரசு பெயர் மாற்றி வைத்துள்ளது. அப்போதும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களுடைய விளைநிலங்களை பறிக்கக்கூடிய எந்தவொரு திட்டத்தையும் திமுக ஏற்றுக்கொள்ளாது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எதையுமே நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்பது உறுதி. இவ்வாறு கனிமொழி கூறினார்.
மேலும் செய்திகள்
ஐஐடியில் சமஸ்கிருத திணிப்பு பாஜ கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளில் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக களப்பணியாற்ற சபதம் ஏற்போம்: அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்
செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் உள்பட 7 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடுநிலையோடு நடக்குமா? அதிமுக மாவட்ட செயலாளர் போல் கலெக்டர் செயல்படுகிறார்
டிடிவி.தினகரன் ட்விட் கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது?
குருமூர்த்தியின் அநாகரிக பேச்சை அதிமுக கண்டிக்காதது ஏன்? திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் கேள்வி
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலிலும் அதிமுகவே களமிறங்க திட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்