யுனஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பூங்காக்களில் நாதஸ்வரம், நடன நிகழ்ச்சி: வரும் வாரங்களில் வில்லுபாட்டு, கட்டக் கூத்து
2019-07-22@ 00:29:40

சென்னை: யூனஸ்கோவின் “கிரியேட்டிவ் சிட்டீஸ்” திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பூங்காக்களில் நாதஸ்வரம் மற்றும் நடனம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வரும் வாரங்களில் வில்லுபாட்டு மற்றும் கட்ட கூத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐநா சபையின் கீழ் செயல்பட்டு வரும் யுனஸ்கோ அமைப்பு “கிரியேட்டிவ் சிட்டீஸ்” திட்டத்தை கடந்த 2014 ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி சென்னையானது கடந்த 2017ம் ஆண்டு “இசை” பிரிவின் கீழ் சென்னை கிரியேட்டிவ் நகரமாக அறிவிக்கப்பட்டது. எனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பூங்காக்கள், பொதுஇடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இணை ஆணையர் (வ (ம) நி) லலிதா, தலைமையில் கலை மற்றும் பண்பாட்டு துறை, ஆன்மஜோதி, கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, மியூசிக் அகாடமி, பாரதிய வித்யா பவன் மற்றும் ஸ்ருதி அறக்கட்டளை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.
அதன் முதல் இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைபெற்றது. இதை இணை ஆணையர் (வ (ம) நி) லலிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆலோசனைக் குழு பிரநிதிகள் கலந்து கொண்டனர். இதில் நாதஸ்வர இசை வித்வான் வட இலுப்பை எஸ்.ஆனந்தன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி மற்றும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் வாரங்களில் பாரதி திருமுருகனின் வில்லுபாட்டு மற்றும் கிருஷ்ணா கட்டைக்கூத்து நாடக மன்றத்தின் கட்டக் கூத்து நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மேலும் பாரதி வித்யா பவன் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.
தனி இணையதளம்
பொதுமக்கள் இசை கலைஞர்கள் இந்த நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள www.chennaiuccn.org என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு chennaiuccn@gmail.com என்ற இமெயில் மற்றும் 63792 17918 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது; சென்னையில் 2,124 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிக்கை..!
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
சென்னை விமானநிலையத்தில் துபாய் விமானத்தில் இயந்திர கோளாறு: பயணிகள் 4 மணி நேரம் தவிப்பு
தொகுதி மக்களுக்கும், கட்சிக்கும் பேரிழப்பாகும்..! ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மிரட்டும் கொரோனா வைரஸ்: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்..! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..!
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!