அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு ஆள்பிடிப்பு முதல்வர் நடத்திய பேரம் குறித்த ஆடியோ விரைவில் வெளியாகும்: டி.டி.வி தினகரன் பேட்டி
2019-07-22@ 00:29:33

சென்னை: பணம், ஒப்பந்தப் பணிகளை வழங்கி அமமுகவில் இருந்து ஆளுங்கட்சிக்கு ஆட்களை பிடிக்கும் முதல்வர் பேசிய ஆடியோ விரைவில் வெளியாகும் என்று டிடிவி தினகரன் கூறினார். சென்னை குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் பகுதியில் அமமுக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு டி.டி.வி தினகரன் அளித்த பேட்டி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சிக்கு ஆள் பிடிக்கும் பணியில் உள்ளார்.
மதுரையில் அமமுக மாவட்ட செயலாளர்களிடையே பணம் மற்றும் அரசு ஒப்பந்த பணி வழங்க, அதற்காக கட்சி மாறவேண்டும் என கேட்டுள்ளார். அதன் ஆடியோ விரைவில் வெளியிடப்படும். அதுபோல் தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையை, பற்றாக்குறை என ஒரேவார்த்தையில் முடிக்கிறார்கள். அதேபோல் மாணவர்கள், மக்கள் பிரச்னைகளில் அக்கறை காட்டாமல், சட்டமன்ற உறுப்பினர்கள் நலனில் மட்டும் அக்கறை காட்டும் அரசாக அதிமுக அரசு விளங்குகிறது.தற்போது அமமுக கட்சியை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால் வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்து சின்னம் கிடைத்த பின்னர் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம் என்றார்.
மேலும் செய்திகள்
ஐஐடியில் சமஸ்கிருத திணிப்பு பாஜ கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளில் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக களப்பணியாற்ற சபதம் ஏற்போம்: அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்
செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் உள்பட 7 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடுநிலையோடு நடக்குமா? அதிமுக மாவட்ட செயலாளர் போல் கலெக்டர் செயல்படுகிறார்
டிடிவி.தினகரன் ட்விட் கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது?
குருமூர்த்தியின் அநாகரிக பேச்சை அதிமுக கண்டிக்காதது ஏன்? திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் கேள்வி
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலிலும் அதிமுகவே களமிறங்க திட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்