நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
2019-07-19@ 14:50:42

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தேனி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறினார். நீலகிரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வரும் நாட்களில் மழையின் அளவை பொறுத்து சராசரி நிலையை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸும் ஒட்டி இருக்கும்.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல்: அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட திட்டம்
தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா: இன்று 775 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை..!
முதல் நாள் என்பதால் சில சிக்கல் இருந்தது: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை: விஜயபாஸ்கர் பேட்டி..!
கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால்தான், தோல்வியில்லை: இதுவரை 3,000 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத்தில் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள் : நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பு
கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது : திருமாவளவன் வலியுறுத்தல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்