குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை: இம்ரான் கான் ட்விட்
2019-07-18@ 10:58:41

இஸ்லாமாபாத்: குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ். கடந்த 2017ம் ஆண்டு இவர் ஈரான் சென்றார். அவரை சிலர் ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதிக்கு கடத்திச் சென்றனர். அங்கு இவரை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வுக்காக தனது நாட்டில் இவர் உளவு பார்த்தாகவும், தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாகவும் இவர் மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, யாதவை தூக்கில் போட பாகிஸ்தான் அரசு அவசர அவசரமாக ஏற்பாடு செய்தது. இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
அவரை உடனடியாக விடுவிக்கும்படி வலியுறுத்தின. ஆனால், அவற்றை எல்லாம் நிராகரித்து விட்டு, யாதவை தூக்கில் போட பாகிஸ்தான் நேரம் நிர்ணயித்தது. இதையடுத்து நெதர்லாந்து நாட்டின் தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. அதில், வியன்னா ஒப்பந்தப்படி, குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரகம் அணுக பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. உளவு பார்த்தவருக்கும், தீவிரவாத சதி செயலில் ஈடுபட்டவருக்கும் தூதரக உதவிகள் கிடைப்பது பற்றி வியன்னா ஒப்பந்தத்தில் எதுவும் கூறப்படவில்லை என பாகிஸ்தான் கூறியது. இதைத் தொடர்ந்து, குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் குவாவி அகமது யூசப் தலைமையிலான 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு கேட்டது. அதன்பின் இதன் மீதான தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 5 மாத இடைவெளிக்குப்பின் இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை வாசித்த சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யூசப், ‘‘குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை பாகிஸ்தான் கட்டாயம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவரை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறுவதாவது; குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை. சிறையிலிருந்து விடுவிக்கவும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் உத்தரவிடவில்லை. சட்டத்தின் படி இந்த விவகாரத்தை கையாள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு: 21.64 லட்சம் பேர் உயிரிழப்பு
நாயிடம் பால் குடிக்கும் பூனைக்குட்டி..! வைரலாகும் வீடியோ...
இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஆவலாக இருந்தேன்...ஆனால் கொரோனா என்னை தடுத்துவிட்டது : இங்கிலாந்து பிரதமர் உருக்கம்
உருமாறிய கொரோனாவையும் எதிர்க்கும்...! தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள்: மாடர்னா நிறுவனம்
உலகத்தை மிரட்டி வரும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு
ஒரே நேரத்தில் 143 செயற்கைகோளை ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ்எக்ஸ்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!