வங்கி சேவையில் தாமதம் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்: திருவொற்றியூரில் பரபரப்பு
2019-07-18@ 00:11:25

திருவொற்றியூர்: திருவொற்றியூர், சுங்கச்சாவடி பஸ் நிறுத்தம் அருகே அரசு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு வைத்து பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 தினங்களாக சர்வர் பிரச்னை என கூறி, வங்கி சேவையில் தாமதம் ஏற்பட்டதாகவும் இதனால் பணம் எடுக்க, செலுத்த வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்றும், இதே நிலை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி கிளையை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் திடீரென திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் வாடிக்கையாளர்களை சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
பேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்
கோயில் பூசாரி தற்கொலை
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு
புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மாட்டு பொங்கலுக்கு கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு தடையை கண்டித்து போராட்டம்
திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் குப்பை கழிவுகள்: துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்