SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிகப்பெரிய ஆபத்து

2019-07-18@ 00:01:50

இந்தியாவில் நோய் தாக்கி பலியானோர் எண்ணிக்கையை விட விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழகம் தான் தொடர்ந்து நம்பர் 1 விபத்து மாநிலமாக இருந்து வருகிறது.  தடுக்க முடியாமல்,  தவிர்க்க வழி தேடி தவிக்கிறது காவல்துறை.எத்தனையோ வழிமுறைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டாலும் தமிழகம் முழுவதும் தொடரும் விபத்துகளை தடுக்க முடியவில்லை. உயிர்பலி  அதிகரிப்பதையும் நிறுத்த வழியில்லை. அந்த ரகம் தான் நேற்று முன்தினம் நந்தனம் அருகே ஒரே பைக்கில் 3 பேர் வந்த போது ஏற்பட்ட விபத்தில் 2 பெண் இன்ஜினியர்கள் பலியானதும். வேளச்சேரியில் இருந்து எழும்பூர் செல்கிறார்களாம்.  அதுவே அவர்களது இறுதிப்பயணமாகவும் மாறியது மிகப்பெரிய சோகம்.
படித்தவர்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் போலீசார்தான் என்ன செய்ய முடியும். 2019 ஜனவரி மாதம் மட்டும் 5173 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 993 பேர் பலியாகி இருக்கிறார்கள். 2018  ஜனவரியில் 1189 பேர். எங்கே சென்று கொண்டு இருக்கிறோம் நாம். எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். கொஞ்சம் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

சென்னை முழுவதும் இப்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அண்ணாநகர் பகுதியில் இந்த பணிகள் முடிவடைந்துவிட்டன. அங்கு ேபாக்குவரத்து விதிமுறைகள் மீறல் தொடர்பாக கண்காணித்ததில் ஒரே நாளில் 90  ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய பணி போலீசாருக்கு வந்து விட்டது. இப்போது புரிந்திருக்கும், அண்ணாநகர் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் ஒரே நாளில் விதிகளை மீறி அத்து மீறி பயணம் செய்கிறார்கள் என்றால்  பரந்து விரிந்த சென்னை முழுவதும் கணக்கிட்டால் தலை சுற்றுகிறது.2019 ஜனவரியில் மட்டும் தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 16,650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தினமும் 167 விபத்துகள் நடக்கின்றன. தினமும் 30 பேர் பலியாகிறார்கள். ஒட்டுமொத்தத்தில்  தமிழகத்தில் மாதம்தோறும் சராசரியாக 1000 பேரை விபத்தில் பலி கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

இது அதீத ஆபத்தான பயணம். அத்துமீறல்களுக்கு அதிக அபராதம், லைசென்ஸ் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்துப்பார்த்தாலும் பொதுமக்கள் இன்னும் திருந்தவில்லை. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி  செல்லும் மெத்தன போக்கும் அதிகரித்து வருகிறது. அபராதங்கள் கூட கட்டுப்படுத்த முடியாத போது அத்துமீறும் நபர்களை அந்த ஒருநாள் மட்டும் மேற்கொண்டு பயணிக்க அனுமதி மறுக்கும் நடவடிக்கையை இனிமேல் போலீசார்  யோசிக்கலாம். யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி விதிமுறைகளை மீறினால் அவர்களை மேற்கொண்டு பயணிக்க நிச்சயம் அனுமதி அளிக்கக்கூடாது.  அவசரத்திற்காக போக்குவரத்து விதிமுறைகளை  மீறும் நபர்களிடம் அப்போதாவது மாற்றம் வருகிறதா என்று பார்க்கலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்