SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையை மையமாக கொண்டு அமைக்கப்படும் 'டிபன்ஸ் காரிடார்' திட்ட பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

2019-07-17@ 12:35:05

டெல்லி :சென்னையை மையமாக கொண்டு ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகளை அமைக்கும் திட்ட பணிகளை துரிதுப்படுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். ராணுவ தளவாடப் பொருட்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வற்காக, கடந்த, 2018ம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இரண்டு 'டிபன்ஸ் காரிடார்' திட்டங்களை அறிவித்தார். முதலாவது, டிபன்ஸ் காரிடார், தமிழகத்தில் சென்னையை மையமாக கொண்டு, தொழில் நகரங்களான கோவை, திருச்சி, சேலம், ஒசூரை இணைக்கும் விதத்தில், அமைக்கப்படுகிறது. இரண்டாவது, 'டிபன்ஸ் காரிடார்' உத்தரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் உடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது சென்னையை மையமாக கொண்டு கோவை - திருச்சி - சேலம் - ஓசூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகள் அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். இதில் முதலீட்டு வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் கட்டமைப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார். ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கு தரப்படுவது போல், தனியார் நிறுவனங்களுக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்க அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார். தொழில் நிறுவனங்கள், தனி நபர், குழுவினர் என தனித்தனியாக விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்