SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதால் நீட் மசோதாக்கள் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது: மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு

2019-07-17@ 01:09:06

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய இரு சட்ட மசோதாக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதனால் அந்த இரண்டு மசோதாக்கள் தமிழக அரசுக்கு 2017ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பி விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாக்கள் கடந்த 2017ம் ஆண்டு  தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என்ற அந்த இரு சட்ட மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  கடந்த 2017-18 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முன் இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைகளுக்கு  உத்தரவிடக்கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

 அவர்கள் தாக்கல் செய்த மனுவில், நாடாளுமன்ற குழு பரிந்துரைப்படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களே தங்கள் சொந்த நடைமுறையை பின்பற்றி கொள்ளலாம் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாக்களுக்கு குறித்த காலத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தால் அரியலூர் மாணவி அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது. அவருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை கிடைத்திருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல், 2017 பிப்ரவரியில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றுள்ளது. அந்த மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், 2017 செப்டம்பரில் மசோதாக்களை ஜனாதிபதி நிறுத்தி வைத்துள்ளார்.  இரு சட்ட மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா?, நிராகரிக்கப்பட்டுள்ளதா? என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம்  கேட்டதற்கு, இரு சட்ட மசோதாக்களும்  நிராகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் பதிலளித்துள்ளார் என்று தெரவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த சட்ட மசோதாக்களை மத்திய அரசு எப்போது பெற்றது. மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜூ எஸ்.வைத்யாவின் பதில் மனுவை மத்திய அரசு வக்கீல் குமரகுரு உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.  அதில், நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்களித்து தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய 2 மசோதாக்களும் 2017 பிப்ரவரி 20ம் தேதி மத்திய  உள்துறை அமைச்சகத்திற்கு கிடைத்தது. மசோதாக்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் படி அன்றைய தினமே சட்டம் மற்றும் நீதி, சுகாதாரம், மனிதவள மேம்பாட்டு துறைகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது. இந்த துறைகளில் கருத்துக்களை பெற்ற பின்னர் 2017 செப்டம்பர் 11ம் தேதி  மசோதாக்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. செப்டம்பர் 18ம் தேதி இரண்டு மசோதாக்களையும் நிராகரித்து ஜனாதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 2017 செப்டம்பர் 22ம் தேதி 2 மசோதாக்களும் தமிழக அரசுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.செப்டம்பர் 18ம் தேதி இரண்டு மசோதாக்களையும் நிராகரித்து ஜனாதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 2017 செப்டம்பர் 22ம் தேதி 2 மசோதாக்களும் தமிழக அரசுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்