SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்

2019-07-17@ 00:20:24

* நடப்பு பேரவை தொடரிலேயே கொண்டு வர மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
* திட்டத்தை மீறி கொண்டு வந்தால் கிரிமினல் நடவடிக்கை- சி.வி.சண்முகம்
சென்னை: நடப்பு கூட்டத்தொடரிலேயே ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான அரசின் கொள்கை முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி பேசினார். பேரவையில் நேற்று கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். கேள்வி நேரம் முடிந்ததும் நேரம் இல்லா நேரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பற்றி ஒரு வினா எழுப்பப்பட்டிருக்கின்றது. அதில் குறிப்பாக திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட தமிழகத்தின் எம்பிக்கள் இந்தக் கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தார்கள். அதற்கு, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு பதிலை சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் மீத்தேன் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. 7 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே நான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அப்பொழுது தொழிற்துறை அமைச்சர், “தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு, தமிழக அரசு உறுதியாக அதனை அனுமதிக்காது. விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை” என்றார். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது என்பதை ஒரு கொள்கை முடிவு எடுத்து இந்த அரசு அறிவிக்க வேண்டும். அறிவிப்பது மட்டுமல்ல அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தால் தான் அங்கு இருக்கக்கூடிய விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு அடைய முடியும். எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது என்ற ஒரே கொள்கை முடிவை இந்த அரசு எடுக்க வேண்டும். அதுவும் இந்தக் கூட்ட தொடரில் எடுத்திட வேண்டும். ஏனென்றால் டெல்டா பகுதி விவசாயிகள் ஒரு பதட்டமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றைய தினம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் ஒரு போராட்டம் நடந்திருக்கின்றது, அவரும் கைது செய்யப்பட்டார். இப்படி போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

அமைச்சர் சி.வி.சண்முகம்: மத்திய அரசால் தமிழகத்தில் ஹைட்ேரா கார்பன் திட்டத்துக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் திட்டம் தொடங்க, ஆய்வு செய்ய, உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.  உடனே வல்லுநர் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் இந்த திட்டத்தை நிராகரித்தால். அதே போல நாங்களும் இந்த திட்டத்தை நிராகரிப்போம். நானும் ஜெயிலுக்கு செல்கிறேன்... நானும் ஜெயிலுக்கு செல்கிறேன்... என அரசியலுக்காக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றால் அரசு ஒன்றும் செய்ய முடியாது. தமிழக அரசே எதிர்ப்பு தெரிவிக்கும் போது, நீங்கள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது.

மு.க.ஸ்டாலின்: விவசாயிகளின் நலன் கருதி போராடக் கூடியவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது என்பது மரபல்ல. டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒரு நிம்மதி வரவேண்டும். இதற்கு உடனடியாக ஒரு கொள்கை முடிவு எடுத்து இந்த அவையிலேயே அறிவிக்க வேண்டும். அதுவும் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றினால் தான் விவசாயிகள் நிம்மதி அடைவார்கள்.அமைச்சர் சி.வி.சண்முகம்: யாரையும் கொச்சைப்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மக்களை அச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்துகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அனுமதி பெறாமல் எந்த திட்டத்தையும் ஆரம்பிக்கக்கூடாது என்று சட்டவிதி உள்ளது. அப்படியிருக்கும் போது கொள்கை முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை இருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்