SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தி.நகர் எம்.எல்.ஏ நடவடிக்கையால் அதிருப்தி, கோஷ்டி மோதல் முதல்வர் வீட்டை அதிமுகவினர் முற்றுகை

2019-07-17@ 00:10:39

சென்னை: தி.நகர் எம்.எல்.ஏ சத்யாவை கண்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை அதிமுகவினர் நேற்று திடீரென முற்றுகையிட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன் டிடிவி.தினகரன் அணிக்கு சென்றார். இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அப்பதவிக்கு தி.நகர் எம்.எல்.ஏ சத்யாவை நியமித்தனர். ஆனால், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளை சேர்ந்த பகுதி செயலாளர்கள், வட்ட செயலளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் இவர்களில் யாரையும் அதிமுக தலைமை மாற்றவில்லை. எனவே, அனைத்து நிர்வாகிகளையும் மாற்றி தன்னுடைய ஆதரவாளர்களை அப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என அதிமுக தலைமைக்கு தி.நகர் எம்.எல்.ஏ சத்யா வலியுறுத்தி வந்தார். அவரால் கோஷ்டி மோதல் உருவானது.

 இவரின் வற்புறுத்தலால் சில நாள் முன்பு தென்சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கடந்த 8ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதற்கு பிறகும் அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்தநிலையில், தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை முற்றுகையிட வந்தனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது, சட்டசபையை முடித்துக்கொண்டு வந்த முதல்வர்,  முற்றுகையிட வந்தவர்களை சந்திக்காமல் உள்ளே சென்றார். பின்னர், முதல்வரின் உதவியாளர் வந்து கோரிக்கை மனுவை வாங்கிக்  கொண்டார். இதுகுறித்து முற்றுகையிட வந்தவர்கள் கூறிகையில், ‘தி.நகர் எம்.எல்.ஏ பணம் வாங்கிக்கொண்டு அவருடைய ஆதரவாளர்களை பதவியில் நியமித்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஓரிரு நாட்களில் ஜெயலலிதா நினைவு இல்லத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

 • rayil21

  ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

 • coronaa_vugaan11

  கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

 • pakistan21

  பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்