ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.35,000 கோடியை தாண்டும்
2019-07-15@ 01:19:38

புதுடெல்லி,: ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி வரும் 2024-25 நிதியாண்டில் ₹35,000 கோடியை தாண்டும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி வரும் 2024-25 நிதியாண்டில் ₹35,000 கோடியை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி துறை செயலாளர் அஜய் குமார் கூறியதாவது: ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி ₹10,700 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இலக்கு ₹20,000 கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் ₹5,600 கோடி மதிப்பிலான தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுவே சாதனை அளவுதான்.
இதற்கு முன்பு கடந்த 2016-17 நிதியாண்டில் ஏற்றுமதி ₹1,500 கோடியாகத்தான் இருந்தது. 2017-18ல் ₹4,500 கோடியாக உயர்ந்தது. ராணுவ பொருட்கள் உற்பத்தியில் தனியார் துறை ஈடுபடுவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையினரை மிகவும் ஊக்குவிக்கிறது. இதற்கேற்ப ஏற்கெனவே இருந்த ராணுவ தளவாடங்கள் மற்றும் பொருட்கள் உற்பத்தி கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றார்.
மேலும் செய்திகள்
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்
இனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை!!
செம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை!!
செம சரிவில் தங்கம் விலை... தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்து ரூ.37,440க்கு விற்பனை!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில் சதம் அடித்த முருங்கைக்காய்: உச்சமடையும் கத்தரிக்காய் விலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்