SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழுக்கு நீதி தேவை

2019-07-14@ 01:40:16

நாட்டின் தலையாய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஒரேவேளையில் மொழி பெயர்ப்பு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டு தாய்மொழிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற இணையதளத்தில் 2019 ஜூலை மாதம் இறுதியில் இருந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அஸ்ஸாமி, இந்தி, கன்னடம், மராத்தி, ஒரியா மற்றும் தெலுங்கு ஆகிய மாநில மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில்   தமிழையும் சேர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடமும் திமுக நாடாளுமன்றக் குழு மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்த பின்னர்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடலாம் என்ற திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5 மொழிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தமிழையும் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் சேர்க்கப்படவில்லை. அதன் முக்கியத்துவம் தெரியாததால் சேர்க்கவில்லை என்றுதான் தெரிகிறது.

இருந்தபோதிலும், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் மேன்மையையும் கருத்தில் எடுத்துச் சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழியின் மேன்மையின் காரணமாக அதற்கு 2004ம் ஆண்டு, பிற இந்திய மொழிகளில் முதலாவதாக செம்மொழித் தகுதி (அந்தஸ்து) வழங்கப்பட்டது. அதற்குப் பின்னரே அந்த (செம்மொழித் தகுதி), பிற மொழிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் சுமார் 8 கோடி மக்களால் பேசப்பட்டு வருகிறது. தமிழகம் தவிர, யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. சிங்கப்பூரிலும், இலங்கையிலும் அலுவல் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மேலும் தமிழ் மொழி, மலேசியா, மியான்மர், கனடா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஏராளமான பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. உண்மையில், இது ஒரு சர்வதேச மொழி. இதன் முக்கியத்துவம் இதர நாடுகளிலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதை எல்லாம் ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தாய் மொழிகளின் முதல் பட்டியலிலேயே தமிழை இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உறுதி மொழி அளித்துள்ளார் என்பது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. செம்மொழி தமிழுக்கு உரிய இடம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2020

  19-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-10-2020

  16-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • farmerprotest15

  வேளாண் சட்ட சர்ச்சை பற்றிய பேச்சுக்கு மத்திய அமைச்சர் வராததால் பஞ்சாபில் தொடரும் போராட்டம்: சட்ட நகல்களை கிழித்து வீசிய விவசாயிகள்

 • telunganarain15

  ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை: கரைபுரளும் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி..!!

 • navarathri15

  நவராத்திரி விழாவுக்காக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுவாமி சிலைகள்: துப்பாக்கி ஏந்தி இரு மாநில போலீசாரும் அணிவகுப்பு மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்